Home
News

பிப்.14 க்கு பின்.. இந்த போன்களை நினைச்சாலும் இவ்ளோ கம்மி விலைக்கு வாங்க முடியாது.. Amazon அதிரடி!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் (Fab Phones Fest) என்கிற குறுகிய கால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையானது, வருகிற பிப்ரவரி 14 ஆம் தேடியோடு முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!

இந்த சிறப்பு விற்பனையின் பெயர் குறிப்பிடுவது போலவே, இது ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு விற்பனையாகும்.

பிப்.14 க்கு பின் நினைச்சாலும் இவ்ளோ ஆபர் கிடைக்காது.. Amazon அதிரடி!

குறிப்பாக ரெட்மி (Redmi), சாம்சங் (Samsung), ஐக்யூ (iQOO) மற்றும் ரியல்மி (Realme) போன்ற நிறுவனங்களின் கீழ் கிடைக்கும் பட்ஜெட் போன்கள் மீதும் நினைத்து பார்க்க முடியாத சலுகைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன!

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? இந்த அமேசான் விற்பனையில் அணுக கிடைக்கும் வங்கி சலுகைகள் என்னென்ன? ஸ்மார்ட்போன்களை தவிர்த்து வேறு என்னென்ன தயாரிப்புகள் மீது சலுகைகள் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

Amazon Fab Phones Fest ல் அணுக கிடைக்கும் வங்கி சலுகைகள்:

- எஸ்பிஐ மேக்ஸ் கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகள் வழியாக பணம் செலுத்தினால் 10 சதவீதம் (ரூ.1,000 வரை ) உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

- ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகள் வழியாக பணம் செலுத்தினால் ரூ.1,250 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

Redmi போன்கள் மீதான தள்ளுபடிகள்:

அமேசானின் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனையின் போது ரெட்மி 10 பவர் (Redmi 10 Power), ரித்மி 10ஏ (Redmi 10A) மற்றும் ரெட்மி ஏ1 (Redmi A1) ஸ்மார்ட்போன்களை முறையே ரூ.10,749, ரூ.7,862 மற்றும் ரூ.6,499 க்கு வாங்க முடியும்.

குறிப்பாக ஃபெடரல் வங்கியின் கீழ் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் அதிகபட்ச தள்ளுபடிகளை பெறலாம்.

Samsung போன்கள் மீதான தள்ளுபடிகள்:

அமேசானின் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் 3 சாம்சங் கேலக்ஸி எம்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல தள்ளுபடிகள் கிடைக்கிறது: அவைகள் கேலக்ஸி எம்13 (Galaxy M13), கேலக்ஸி எம்33 (Galaxy M33) மற்றும் கேலக்ஸி எம்04 (Galaxy M04) ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.8,699, ரூ.13,999 மற்றும் ரூ.7,499 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் மீது மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்கு நோ-காஸ்ட்-இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கிறது.

Realme போன்கள் மீதான தள்ளுபடிகள்:

ரியல்மி 50ஐ ப்ரைம் (​Realme 50i Prime) மற்றும் ரியல்மி 50ஏ ப்ரைம் (Realme 50A Prime) ஆகிய இரண்டு பட்ஜெட் விலை போன்களை வாங்க இதுவே சிறந்த நேரமாகும். ஏனென்றால், இந்த போன்கள் முறையே ரூ.6,299 மற்றும் ரூ.8,999-க்கு க்கு வாங்க கிடைகின்றன

இந்த விற்பனையில் ரியல்மி 50 5ஜி (Realme 50 5G) போனின் மீதும் சலுகைகள் கிடைக்கிறது. இதை ரூ.12,999 க்கு வாங்கலாம்; மேலும் மூன்று மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் உள்ளது.

iQOO போன்கள் மீதான தள்ளுபடிகள்:

இந்த விற்பனையின் கீழ் ஐக்யூ இசட்6 5ஜி (iQOO Z6 5G), ஐக்யூ இசட்6 லைட் 5ஜி (iQOO Z6 Lite 5G) மற்றும் ஐக்யூ நியோ 6 5ஜி (iQOO Neo 6 5G) மீது கிடைக்கும் சலுகைகளையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், நீங்கள் எஸ்பிஐ மற்றும் ஃபெடரல் வங்கியின் சலுகைகளை பயன்படுத்தும் பட்சத்தில், மேற்கண்ட ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.14,499, ரூ.11,999 மற்றும் ரூ.24,990 க்கு சொந்தமாக்கி கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன்களை தவிர்த்து வேறு என்னென்ன தயாரிப்புகள் மீது சலுகைகள் கிடைக்கிறது?

போட், ஜேபிஎல், ஆப்பிள், அமாஸ்ஃபிட், சியோமி மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்கள், டேப்லெட்டுகள், இயர்பட்ஸ் போன்ற தயாரிப்புகளின் மீது 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய சில முக்கிய சலுகைகள்:

- அமாஸ்ஃபிட் ஜிடிஎஸ்2 மினி ஸ்மார்ட் வாட்ச் (Amazfit GTS2 Mini Smart Watch) ரூ.4,999 க்கு வாங்க கிடைக்கிறது.

- ஜேபிஎல் வேவ் 200 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (JBL Wave 200 True Wireless earbuds) ரூ.2,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- சென்ஹைசர் ஐஇ 100 ப்ரோ வயர்டு இன்-இயர் இயர்போன்ஸ் (Sennheiser IE 100 Pro Wired in-ear earphones) ரூ.6,900 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
List of Top Deals on Budget phones in Amazon Fab Phones Fest Sale 2023 Which Ends on February 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X