UPI பரிவர்த்தனை.. முன்னணியில் இருக்கும் டாப் 5 மாநிலங்கள்.. தமிழ்நாட்டிற்கு எந்த இடம்?
இந்தியா முழுவதும் யுபிஐ (UPI) சேவையை அதிக மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதுவும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும் முடியும், பெறவும் முடியும். பின்பு சிறிய கடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரையில் யுபிஐ மூலம் பணம் செலுத்த முடிகிறது.
எனவே தான் அதிக மக்கள் இந்த யுபிஐ செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். யுபிஐ சேவை கடந்த 2016ஆம் ஆண்டு NPCI எனப்படும் இந்திய தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் மூலம் ரிசர்வ் வங்கி ஆளுநரால் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் 2020, 2021, 2022 காலகட்டத்தில் கொரொனா பெருந்தொற்று ஏற்பட்டபோது மக்கள் தொடுதல் இல்லாத முறையை பின்பற்றினர். அப்போது தான் இந்த யுபிஐ முறையில் பணப் பரிவர்த்தனை பயன்பாடு உச்சம் தொட்டது.

அதன்பிறகு இந்த யுபிஐ பணப் பரிவர்த்தனை ஆனது மக்களின் தினசரி வாழ்வில் ஒன்றாக மாறிவிட்டது. முன்பு கூறியது போல் சிறிய கடைகள் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் இந்த யுபிஐ மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கடந்த ஆகஸ்ட் 2025 மாத நிலவரப்படி இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகளில் முன்னணியில் இருக்கும் டாப் 5 மாநிலங்களை இப்போது பார்க்கலாம்.
முதல் இடம்
இந்தியாவில் யுபிஐ பணப் பரிவத்தனையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது மகாராஷ்டிரா. அதாவது அதிகப்படியான யுபிஐ பரிவர்த்தனைகள் செய்த மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இதற்கு வர்த்தக தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை தான் முக்கிய காரணம். கூடவே புனேவின் தொழில்துறை வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றி வருகிறது.
மேலும் ஏராளமான ரீடெய்ஸ் ஸ்பாட்கள், ஷாப்பிங் ஹப்கள் மகாராஷடிராவில் வரிசைகட்டி வந்துவிட்டன. இந்த மாநிலத்தில் மட்டும் கடந்த மாதம் 1,985.58 மில்லியன் பரிவர்த்தனைகள் மூலம் 2,32,558 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் மொத்த யுபிஐ பரிவர்த்தனையில் 9.36 சதவீதம் என்று கூறப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 10 சதவீதம் என்று கூறலாம்.
இரண்டாவது இடம்
நாட்டில் யுபிஐ பணப் பரிவர்த்தனையில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது கர்நாடகா. இதற்கு முக்கிய காரணம் ஐடி துரையில் கொடி கட்டி பறக்கும் பெங்களூரு நகரம் ஆகும். நாட்டில் அதிகமான மக்கள் வேலை தேடி பெங்களூருவில் குடியேறியுள்ளனர். குறிப்பாக இந்த நகரத்தில் ஸ்மார்ட்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த மாதம் 1.077.76 மில்லியன் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இதன் மூலம் 1, 42, 488 கோடி ரூபாய் டிஜிட்டல் முறையில் பகிரப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த டிரான்ஸேக்ஷனில் 5.73 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது இடம்
அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது உத்தரப் பிரதேச மாநிலம். இங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் 1,059.40 மில்லியன் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் (Digital Transactions) அரங்கேறியுள்ளன. அதுவும் 1,31,586 கோடி ரூபாய் யுபிஐ மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த பணப் பரிமாற்றத்தில் 5.29 சதவீதம் ஆகும். இந்த மாநிலத்தில் சிறிய நகரங்களில் கூட டிஜிட்டல் ஆப்கள் குறித்த அறிவு வேகமாக பரவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது இடம்
நாட்டில் யுபிஐ பணப் பரிவர்த்தனையில் நான்காவது இடம் பிடித்திருக்கிறது தெலங்கானா. குறிப்பாக 803.98 மில்லியன் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளை தெலங்கானா மேற்கொண்டுள்ளது. பின்பு இதன் மூலம் 1,22,334 கோடி ரூபாய் டிஜிட்டல் முறையில் அனுப்பியுள்ளனர். இது நாட்டின் மொத்த டிரான்ஸேக்ஷனில் 4.92 சதவீதம் ஆகும். அதுவும் இந்த மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் நகரப்புற வளர்ச்சி, உலகளாவிய திறன் மையங்கள், தகவல்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் போன்றவை முன்னணியில் உள்ளன.
ஐந்தாவது இடம்
யுபிஐ பரிவர்த்தனையில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது தமிழ்நாடு. அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் 799.24 மில்லியன் பணப் பரிவர்த்தனைகள் உடன் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. குறிப்பாக இங்கு 1,18,150 கோடி ரூபாய் டிஜிட்டல் முறையில் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பணப் பரிமாற்றத்தில் 4.75 சதவீதம் ஆகும்.


Click it and Unblock the Notifications








