இதை மிஸ் பண்ணாதிங்க., இதோ டாப் 10 ஸ்மார்ட்டிவிகள்- விலை ரூ.15,000-க்கு கீழ்தான்!

|

தொலைக்காட்சி பயன்பாடு என்பது நீண்டகாலமாக வீட்டில் அங்கம் வகிக்கும் பொருள்., தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற் தொலைக்காட்சி தோற்றங்களும் காட்சிகளும் மாறிக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன்கள் எப்படி அனைவரையும் ஆக்கிரமித்து வருகிறதோ அதேபோல் அனைவரின் வீட்டிலும் ஸ்மார்ட் டிவி பயன்பாடு பிரதான ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக கொரோனா பரவிய காலம் முதல் ஏணைய திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. இதை ஓடிடி அணுகலோடு பெரிய திரையில் பார்ப்பதற்கு ஸ்மார்ட்டிவி தேவை கட்டாயமாகி இருக்கிறது.

பட்ஜெட் விலையிலான சிறந்த ஸ்மார்ட் டிவிகள்

பட்ஜெட் விலையிலான சிறந்த ஸ்மார்ட் டிவிகள்

ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் சேவையால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். பட்ஜெட் விலையிலான சிறந்த ஸ்மார்ட் டிவிகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ரூ.15000-த்துக்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள்

ரூ.15000-த்துக்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள்

ஸ்மார்ட் டிவிகளில் பல்வேறு அளவுகளில் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ரூ.15000-த்துக்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள் குறித்து பார்க்கலாம். இந்த விலை எம்ஐ, ஒனிடா, டிசிஎல், வியூ, இஃபால்கான் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்டிவிகள் கிடைக்கிறது.

எம்ஐ டிவி 4ஏ ப்ரோ 32- இன்ச்

எம்ஐ டிவி 4ஏ ப்ரோ 32- இன்ச்

எம்ஐ டிவி 4ஏ ப்ரோ எச்டி ரெடி ஆண்ட்ராய்டு எல்இடி அம்சத்தோடு வருகிறது. இந்த டிவி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. 20 வாட்ஸ் அவுட்புட் டால்பி ப்ளஸ் டிடிஎஸ் எச்டி ப்ளஸ் ஆதரவோடு வருகிறது. ஆண்ட்ராய்டு 9.0, கூகுள் அசிஸ்டென்ட், எல்இடி டிஸ்ப்ளே ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இந்த டிவிக்கு 1 வருட தயாரிப்பு வாரண்டி, 1 வருட பேனல் வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த டிவியின் விலை ரூ.14,499 ஆக இருக்கிறது.

Amazon Basics FireTV Edition 32-inch

Amazon Basics FireTV Edition 32-inch

அமேசான் பேசிக்ஸ் ஃபயர் டிவி எடிசன் ஸ்மார்ட்டிவி எச்டி ரெடி, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 178 டிகிரி வியூவிங் ஆங்கிள் உள்ளிட்ட ஆதரவுகள் இருக்கிறது. இது 2 எச்டிஎம்ஐ போர்ட்ஸ், 2 யூஎஸ்பி போர்ட் ஆதரவுகள் இருக்கிறது. 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்பீக்கர் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் ஆதரவுடன் வருகிறது. ஃபயர் டிவி ஓஎஸ் மூலம் இந்த டிவி இயக்கப்படுகிறது. ஏ ப்ளஸ் எல்இடி கிரேட், 1 வருட வாரண்டியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Onida FireTV Edition 32-inch

Onida FireTV Edition 32-inch

ஒனிடா ஃபயர்டிவி எடிஷன் 32 இன்ச் மாடல் ஸ்டீரிமிங் அணுகலுக்கு என ஃபயர் டிவி ஆதரவோடு வருகிறது. இது எச்டி ரெடி 60 ஹெட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 3 எச்டிஎம்ஐ போர்ட், 1 யூஎஸ்பி ஆதரவு உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்டிவியில் 16 வாட்ஸ் அவுட்புட் டால்பி டிஜிட்டல் ப்ளஸ் டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் அம்சம் இருக்கிறது. டூயல் பேண்ட் வைஃபை, அலெக்ஸா குரல் அழைப்பு உள்ளிட்ட ஆதரவுகளோடு 1 வருட வாரண்டியோடு வருகிறது. இதன் விலை ரூ.14,149 ஆக இருக்கிறது.

TCL HD 32-inch Android TV OS Smart TV

TCL HD 32-inch Android TV OS Smart TV

டிசிஎல் எச்டி 32 இன்ச் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஸ்மார்ட்டிவி எச்டி ரெடி, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 178 டிகிரி வியூவிங் ஆங்கிள் உள்ளிட்ட ஆதரவோடு வருகிறது. இதில் 2 எச்டிஎம்ஐ போர்ட், 2 யூஎஸ்பி போர்ட் ஆதரவுகள் இருக்கிறது. ஆண்ட்ராய்டு ஓஎஸ், 16 வாட்ஸ் அவுட்புட்டுடன் 2 சேனல் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது.

Hisense 32-inch smart TV

Hisense 32-inch smart TV

ஹைசென்ஸ் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி எச்டி, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 2 எச்டிஎம்ஐ போர்ட், 2 யூஎஸ்பி போர்ட்களுடன் வருகிறது. இது 20 வாட்ஸ் அவுட்புட் டிடிஎஸ் ஸ்டுடியோ சவுண்ட் ஆதரவோடு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0 பை ஆதரவு, இது 1ஜிபி ரேம், 8ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி ரூ.13,499 என்ற விலையில் கிடைக்கிறது.

Realme 32-inch smart TV

Realme 32-inch smart TV

ரியல்மி 32 இன்ச் ஸ்மார்ட்டிவி எச்டி ரெடி 1366 x 768 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இதில் 24 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இந்த டிவியில் நெட்பிளிக்ஸ் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆதரவுகள் இருக்கிறது. இதற்கு 1 வருட வாரண்டியும், 2 வருட பேனல் வாரண்டியும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவி ரூ.13,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Mi 4A Horizon Edition smart TV

Mi 4A Horizon Edition smart TV

எம்ஐ 4ஏ ஹரிஜான் எடிஷன் ஸ்மார்ட்டிவி எச்டி ஆதரவு 1366 x 768 பிக்சல்கள் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்டுடன் இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இதில் கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் குரோம்கேஸ்ட் இன் பிள்ட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது.

VU Premium 32-inch smart TV

VU Premium 32-inch smart TV

வியூ ப்ரீமியம் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி எச்டி ரெடி 1366x768 பிக்சல்கள் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இதில் 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் ஆதரவு உள்ளது. ஆண்ட்ராய்டு ஆதரவோடு கூகுள் அசிஸ்டென்ட், க்ரோம்கேஸ்ட் அணுகலோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி விலை ரூ.14,499 ஆக இருக்கிறது.

iFFALCON 32-inch smart TV

iFFALCON 32-inch smart TV

இஃபால்கான் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி 81.28 செமீ அளவில், ஏ ப்ளஸ் கிரேட் எச்டி ரெடி ஆதரவோடு வருகிறது. மைக்ரோ டிம்மிங், கூகுள் ஆப் ஸ்டோர் ஆதரவுகள் இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியில் ஆண்ட்ராய்டு 9.0, கூகுள் அசிஸ்டென்ட் அணுகல் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ரூ.12,990 என்ற விலையில் கிடைக்கிறது.

Toshiba 32-inch smart TV

Toshiba 32-inch smart TV

டோஷிபா 32 இன்ச் ஸ்மார்ட்டிவி விடா ஓஎஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் ஏடிஎஸ் எல்இடி ஆதரவோடு வருகிறது. எச்டி ரெடி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 2 எச்டிஎம்ஐ போர்ட், 2 யூஎஸ்பி ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியில் 20 வாட்ஸ் அவுட்புட் பவர்ஃபுல் டால்பி ஆடியோ ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.14,499 ஆக இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
List of Top 10 smart TVs in India at Under Rs.15,000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X