Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!
கோவிட்-19 பரவல், லாக்டவுன் கட்டுப்பாடுகள், சிப்செட் பற்றாக்குறை என கடந்த 2021 ஆம் ஆண்டு "பல்லைக் கடித்துக்கொண்டு" காத்திருந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இந்த 2022 ஆம் ஆண்டு ஒரு "பெருமூச்சாக" அமைந்தது என்றே கூறலாம்.

2022 ஜனவரி மாதமே அதற்கு சாட்சி!
இந்த ஆண்டின் முதல் மாதமே ஐந்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆனதே அதற்கு சாட்சி. "டக்-டக்கென்று" புதிய போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், சற்றே பழைய ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவிலான விலை வீழ்ச்சியைக் கண்டன.
அப்படியாக "இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் விலைக்குறைப்பை சந்தித்த ஸ்மார்ட்போன்கள்" என்கிற பட்டியலில் சியோமி, ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் சாம்சங் நிறுவனங்களின் பிரபலமான / பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்கள் முதல் மற்றும் ஜியோபோன் வரை பல மாடல்கள் உள்ளன; இதோ முழு லிஸ்ட்!

12. Samsung Galaxy M32 5G
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது ரூ.2,000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

11. Samsung Galaxy M52 5G
கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஆனது இதுவரை பல விலைக்குறைப்புகளை சந்தித்துள்ளது. அப்படியாக தற்போது இதன் 6ஜிபி ரேம் வேரியண்ட் அந்த ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10. iQoo 7
ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் (8GB + 128GB மற்றும் 12GB + 256GB) முறையே ரூ.31,990 மற்றும் ரூ.35,990 க்கு அறிமுகமானது.
தற்போது இந்த இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களுமே ரூ.2,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று முறையே ரூ.29,990 மற்றும் ரூ.33,990 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக, அமேசான் வலைத்தளமானது ரூ.1,000 என்கிற தள்ளுபடி கூப்பனையும் வழங்குகிறது.

09. OnePlus 9 5G
ஒன்பிளஸ் 9 5ஜி ஆனது கடந்த ஆண்டு 2 ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ரேம் ஆப்ஷன்கள் முறையே ரூ.49,999 க்கும் மற்றும் ரூ.54,999 க்கும் வாங்க கிடைத்தது.
அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இந்த ஸ்மார்ட்போன் ரூ.5,000 மற்றும் ரூ.7,000 என்கிற இரண்டு விலைக்குறைப்புகளை பெற்று தற்போது ரூ.37,999 முதல் வாங்க கிடைக்கிறது.

08. OnePlus 9 Pro
ஒன்பிளஸ் 9 மாடலை போலவே, 9 ப்ரோ மாடலும் இரண்டு முறை விலைக்குறைப்புகளை சந்தித்துள்ளது. ரூ.64,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.15,000 என்கிற நம்பமுடியாத விலைக்குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது.
அதாவது பேஸிக் வேரியண்ட் ஆனது ரூ.49,999 க்கும், 12ஜிபி ரேம் ஆனது ரூ.54,999 க்கும் விற்கப்படுகிறது.

07. Vivo V21 5G
விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.4,000 விலைக்குறைப்பை பெற்றுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.27,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

06. Vivo V21e 5G
முன்னதாக விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன், இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் (8GB + 128GB மற்றும் 8GB + 256GB) முறையே ரூ.32,990 மற்றும் ரூ.35,990 க்கு அறிமுகமானது.
தற்போது இந்த இரண்டு வேரியண்ட்களின் மீதுமே ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பு அணுக கிடைக்கிறது. அதாவது முறையே ரூ.27,990 மற்றும் ரூ.30,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

05. Mi 11X Pro
சியோமி இந்தியா நிறுவனம் அதன் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.39,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.
தற்போது இது ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.34,999 க்கும் (8ஜிபி + 128ஜிபி) மற்றும் ரூ.36,999 க்கும் (12ஜிபி + 256ஜிபி) வாங்க கிடைக்கிறது.

04. Redmi Note 10S
சியோமி நிறுவனம் அதன் ரெட்மி 10எஸ் ஸ்மார்ட்போனை இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் அறிமுகப்படுத்தியது - 6GB + 64GB மற்றும் 6GB + 128GB மற்றும் இதன் விலைகள் முறையே ரூ.14,999 மற்றும் ரூ.15,999 ஆகும்
தற்போது இது ரூ.2,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று முறையே ரூ.12,999 க்கும் மற்றும் ரூ.14,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

03. Redmi Note 10T 5G
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4GB + 64GB மற்றும் 6GB + 128GB என்கிற இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது ரூ.2,000 என்கிற விலைக்குறைப்புக்கு பிறகு ரூ.11,999 மற்றும் ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

02. JioPhone Next
ரிலையன்ஸ் நிறுவனம் தனது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆன ஜியோபோன் நெக்ஸ்ட்-ஐ கடந்த ஆண்டு ரூ.6,499க்கு அறிமுகப்படுத்தியது. தற்போது இது ரூ.1,900 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.4,599 க்கு வாங்க கிடைக்கிறது.

01. Oppo A16K
ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வேரியண்ட்களின் கீழ் முறையே ரூ.10,490 மற்றும் ரூ.10,990 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
சமீபத்தில் இதன் 3ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பையும், இதன் 4ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.500 என்கிற விலைக்குறைப்பையும் பெற்றது.


Click it and Unblock the Notifications