வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்- வரிசைக்கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்: நீங்கள் தயாரா?

|

இந்தியாவில் இந்த வாரம் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கிறது. கூடுதலாக போனஸ் கேட்ஜெட்களும் இந்த வாரம் அறிமுகமாக இருக்கிறது. ஒப்போ, ரெட்மி உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களின் பிராண்ட்கள் பட்டியலில் இருக்கிறது. அதுமட்டுமில்லை மிகவும் எதிர்பார்த்து சமீபத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போனும் இந்த வாரம் தான் விற்பனைக்கு வருகிறது.

வரிசைகட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்

வரிசைகட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்

இந்த வாரம் பல ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கிறது. இதை ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் உறுதிப்படுத்தி உள்ளன. ஒப்போ, ரெட்மி மற்றும் டெக்னோ உள்ளிட்ட பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் இந்த வாரம் அறிமுகமாக இருக்கிறது. கொஞ்ச நாள் வெயிட் பண்ணி இந்த ஸ்மார்ட்போன் தான் வாங்க வேண்டும் பலரும் காத்திருந்தனர். அப்படியான ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகமான நிலையில் இந்த வாரம் அதுவும் விற்பனைக்கு வருகிறது.

ஒப்போ ரெனோ 8 அறிமுகம் உறுதி

ஒப்போ ரெனோ 8 அறிமுகம் உறுதி

Oppo Reno 8 சீரிஸ் ஸ்மார்ட்போனும் இந்த வாரம் அறிமுகமாக இருக்கிறது. ஒப்போ ரெனோ 8 தொடரில் ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இடம்பெறும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூலை 18 ஆம் தேதி அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் புதுப்பித்த வடிவமைப்புடன் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்துக்கு வெயிட் பண்ணலாமா?.

50 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு

50 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு

ரெனோ 8 ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 90Hz புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 1300 எஸ்ஓசி ஆதரவுடன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 எம்பி டிரிபிள் கேமரா அமைப்புடன் 32 எம்பி செல்பி ஸ்னாப்பர் இருக்கும் எனவும் இதில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் அறிமுகத்துக்கு வெயிட் பண்ணலாமா?

ஸ்மார்ட்போன் அறிமுகத்துக்கு வெயிட் பண்ணலாமா?

அதேபோல் ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.62 இன்ச் பெரிய அமோலெட் டிஸ்ப்ளேவை 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 எஸ்ஓசி வசதியை கொண்டிருக்கும் எனவும் 4500 எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி டிரிபிள் கேமரா அமைப்புடன் 32 எம்பி செல்பி கேமரா வசதி உடன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் 9 அறிமுக தேதி

டெக்னோ ஸ்பார்க் 9 அறிமுக தேதி

டெக்னோ நிறுவனம் tecno spark 9 ஸ்மார்ட்போனை ஜூலை 18 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே உடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. விர்ச்சுவல் ரேம் உட்பட 11 ஜிபி வரை ரேம் வசதி இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் எனவும் மீடியாடெக் ஹீலியோ ஜி37 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. டூயல் கேமரா அமைப்புடன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவை இந்த சாதனம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி கே50ஐ அறிமுக தேதி

ரெட்மி கே50ஐ அறிமுக தேதி

Redmi K50i ஸ்மார்ட்போனானது ஜூலை 20 ஆம் தேதி இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது முழு எச்டி+ தெளிவுத்திறன் உடன் கூடிய 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எப்படி இருக்கு?

ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எப்படி இருக்கு?

இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவுடன் 64 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 8 எம்பி மேக்ரோ லென்ஸ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Redmi K50i ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி மூலமான இயக்க ஆதரவுடன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5080 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போனஸ் சாதனம் என்ன தெரியுமா?

போனஸ் சாதனம் என்ன தெரியுமா?

இந்த வாரம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி வேறு சில கேட்ஜெட்களும் அறிமுகமாக இருக்கிறது. ஒப்போ நிறுவனம் தனது முதல் டேப்லெட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் பெயர் Oppo Pad Air என தெரிவிக்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 8 சீரிஸ் அறிமுகமாகும் அதே ஜூலை 18 ஆம் தேதி இந்த ஒப்போ பேட் ஏர்-ம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலைப் பிரிவில் முதல் டேப்லெட்

பட்ஜெட் விலைப் பிரிவில் முதல் டேப்லெட்

இந்த டேப்லெட் ஆனது பட்ஜெட் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இந்த டேப்லெட் ஆனது ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. காரணம் இந்த சிப்செட் பெரும்பாலும் பட்ஜெட் விலை டிவைஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும்.

நத்திங் போன் (1) இந்தவாரம் விற்பனை

நத்திங் போன் (1) இந்தவாரம் விற்பனை

அதேபோல் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நத்திங் போன் (1) கடந்த ஜூலை 12 ஆம் தேதி அறிமுகமானது. ஸ்மார்ட்போன் சந்தையில் வித்தியாசமான தோற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த நத்திங் போன் (1) ஜூலை 21 முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Best Mobiles in India

English summary
List of smartphones to be launched this week, Oppo, redmi, Nothing, Tecno in list

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X