2025 ஏப்ரல் மாதத்தின் முதல் குட் நியூஸ்.. உச்சக்கட்ட கடுப்பில் இருந்த Samsung போன் ஓனர்கள் கூல் ஆகினர்!
சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களை வைத்து இருக்கும் பல ஓனர்கள் வெறுப்பின் உச்சகட்டடத்தில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலனவர்களின் மைண்ட்-வாய்ஸ் "கடுப்பை கிளப்பதுங்க பாஸு.. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. எல்லை மீறி போறீங்க ஆமாம்.. ஒழுங்கு மரியாதையா அப்டேட்-ஐ அனுப்பி வைங்க.." என்பதாகத் தான் இருக்கிறது.
ஏனென்றால் சாம்சங் நிறுவனம் இன்னும் ஒரு கேலக்ஸி ஸ்மார்ட்போனுக்கு கூட.. ஒரு கேலக்சி டேப்லெட் மாடலுக்கு கூட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையிலான ஒன் யுஐ 7-க்கான ஸ்டேபிள் வெர்ஷனை (One UI 7 Stable Version) அனுப்பி வைக்கவில்லை!

கஸ்டமர்களை நீண்ட காத்திருப்புக்கு உள்ளாகிய பின்னர், ஒருவழியாக சாம்சங் நிறுவனம் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7-க்கான ஸ்டேபிள் வெர்ஷனின் லான்ச் டைம்லைனை அறிவித்துள்ளது. ஒருவேளை நீங்கள் ஒன்யுஐ 7 அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்திருந்தால், 2025 ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கு சாம்சங்கின் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்கிற பட்டியல் இதோ:
ஏப்ரல் 2025 இல் என்னென்ன கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7-க்கான ஸ்டேபிள் வெர்ஷன் கிடைக்கும்?
சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Galaxy S24)
சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Galaxy S24 Plus)
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra)
சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Galaxy S24 FE)
சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Galaxy S23)
சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் (Galaxy S23 Plus)
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Galaxy S23 Ultra)
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Galaxy S23 FE)
சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Galaxy S22)
சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் (Galaxy S22 Plus)
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா (Galaxy S22 Ultra)
சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Galaxy Z Fold 6)
சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 6 (Galaxy Z Flip 5)
சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Galaxy Z Fold 5)
சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 5 (Galaxy Z Flip 5)
ஏப்ரல் 2025 இல் என்னென்ன கேலக்ஸி டேப்லெட்களுக்கு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7-க்கான ஸ்டேபிள் வெர்ஷன் கிடைக்கும்?
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 பிளஸ் (Galaxy Tab S10 Plus)
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 அல்ட்ரா (Galaxy Tab S10 Ultra)
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 (Galaxy Tab S9)
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 பிளஸ் (Galaxy Tab S9 Plus)
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா (Galaxy Tab S9 Ultra)
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 எப்இ (Galaxy Tab S9 FE)
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 எப்இ பிளஸ் (Galaxy Tab S9 FE Plus)
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 (Galaxy Tab S8)
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ் (Galaxy Tab S8 Plus)
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா (Galaxy Tab S8 Ultra)
சாம்சங் நிறுவனத்தின் இந்த சாஃப்ட்வேர் ரோல்-அவுட் திட்டங்கள் ஆனது பிராந்தியத்தை பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது இது எல்லா இடங்களையும் சென்றடைய சில நாட்கள் ஆகலாம். செட்டிங்ஸ் > சாஃப்ட்வேர் அப்டேட் பகுதிக்கு சென்று டவுன்லோட் அன்ட் இன்ஸ்டால்-ஐ டேப் செய்வதன் மூலம், உங்களுக்கு அப்டேட் வந்துள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








