தொழில்நுட்ப உலகின் பணக்கார பிரபலங்கள் பட்டியல் வெளியானது
தொழில்நுட்ப உலகில் பணக்காரர்களாக இருப்பவர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுளஅளது ஃபோர்ப்ஸ் நிறுவனம், இங்கு தொழில்நுட்ப உலகின் பணக்காரர்களாக இருப்பவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தாண்டின் பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர்..

Bill Gates
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

Larry Ellison
ஒரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான லேர்ரி எல்லிஸன் 51.3 பில்லியன் டாலர்களை உலகளவில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.

Jeff Bezos
அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் 34.8 பில்லியன் டார்களோடு உலகளவில் 15 ஆம் இடத்தில் இருக்கிறார்.

Mark Zuckerberg
பேஸ்புக் நிறுவனத்தை நிறுவிய மார்க் சூக்கர்பர்க் 33.4 பில்லியன் டாலர்களோடு உலகளவில் 16 ஆவது இடத்தில் இருக்கிறார்.

Larry Page
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான லேர்ரி பேஜ் 29.7 பில்லியன் டாலர்களோடு உலகளவில் 19 ஆம் இடத்தில் இருக்கிறார்.

Sergy Brin
கூகுள் நிறுவனத்தின் ப்ரெத்யேக திட்டஙஅகளுக்கான தலைவர் மற்றும் இணை நிறுவனரான ப்ரின் 29.2 பில்லியன் டாலர்களோடு 20வது இடத்தில் இருக்கிறார்.

Steve Ballmer
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் 21.5 பில்லியன் டாலர்களோடு 35 இடம் பிடித்திருக்கிறார்.

Laurene Powell Jobs
எமர்ஸன் நிறுவனத்தின் நிறுவனரான ஜாப்ஸ் 19.5 பில்லியன் டாலர்களை கொண்டு உலகளவில் 45 இடம் பிடித்துள்ளார்.

Michael Dell
டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் டெல் 19.2 பில்லியன் டாலர்களோடு 47 ஆம் இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications