Home
News

இந்த 26 Realme போன்களின் கதையும் முடிஞ்சது.. இந்த லிஸ்ட்ல உங்க போன் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ள பயனர்கள், ஒரு மாதத்திற்கும் மேலாக ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை (Android 16 Update) அனுபவித்து வருகின்றனர். மற்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு இன்னும் வாராத இந்த அப்டேட் பல ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு வரவே வாராது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒவ்வொரு ரியல்மி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் போது அது எத்தனை ஆண்டுகளுக்கான அல்லது எத்தனை மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறும் என்கிற விவரங்களும் பகிரப்படும். அதுதான் அந்த ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு அப்டேட் பாலிஸியாகும். அதன்படி பல பழைய ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வராது.

இந்த 26 Realme போன்களின் கதையும் முடிஞ்சது!

எந்தெந்த ரியல்மி ஜிடி சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வராது?
1. ரியல்மி ஜிடி 2 (Realme GT 2)
2. ரியல்மி ஜிடி 2 ப்ரோ (Realme GT 2 Pro)
3. ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் (Realme GT 2 Explorer Master)
4. ரியல்மி ஜிடி 5ஜி (Realme GT 5G)

5. ரியல்மி ஜிடி மாஸ்டர் (Realme GT Master)
6. ரியல்மி ஜிடி நியோ தொடர் (Realme GT Neo series)
7. ரியல்மி ஜிடி நியோ 3 (Realme GT Neo 3)
8. ரியல்மி ஜிடி நியோ 3டி (Realme GT Neo 3T)
9. மற்றும் இதற்கும் முன் வெளியான பழைய ஜிடி நியோ சீரீஸ் மாடல்கள்

எந்தெந்த ரியல்மி நம்பர் சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வராது?
1. ரியல்மி 11 (Realme 11 )
2. ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro)
3. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் (Realme 11 Pro Plus)
4. ரியல்மி 11எக்ஸ் (Realme 11x)
5. மற்றும் இதற்கும் முன் வெளியான பழைய ரியல்மி நம்பர் சீரீஸ் மாடல்கள்

எந்தெந்த ரியல்மி நார்ஸோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வராது?
1. ரியல்மி நார்ஸோ 60 (Realme Narzo 60)
2. ரியல்மி நார்ஸோ 60 ப்ரோ (Realme Narzo 60 Pro)
3. ரியல்மி நார்ஸோ 60x (Realme Narzo 60x)
4. ரியல்மி நார்ஸோ என்55 (Realme Narzo N55)
5. ரியல்மி நார்ஸோ என்53 (Realme Narzo N53)
6. மற்றும் இதற்கும் முன் வெளியான பழைய நார்ஸோ சீரீஸ் மாடல்கள்

எந்தெந்த ரியல்மி சி சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வராது?
1. ரியல்மி சி67 (Realme C67)
2. ரியல்மி சி55 (Realme C55)
3. ரியல்மி சி53 (Realme C53)
4. ரியல்மி சி51 (Realme C51)
5. ரியல்மி சி51எஸ் (Realme C51s)
6. மற்றும் இதற்கும் முன் வெளியான பழைய சி சீரீஸ் மாடல்கள்

மேற்கண்ட பட்டியலில் உங்கள் ரியல்மி ஸ்மார்ட்போன் இருந்தால், அது ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை பெற வாய்ப்பில்லாமல் போகலாம். ஆக கூகுளின் ஆண்ட்ராய்டு 15 க்கு அடுத்தபடியாக ஆண்ட்ராய்டு 16 மற்றும் அதற்கு மேல் வரும் அப்டேட்கள் வழியாக அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சங்களை பயன்படுத்த நீங்கள் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ரியல்மி அல்லது வேறு பிராண்டின் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டியிருக்கும்.

மறுகையில் உள்ள தகுதியான ரியல்மி ஸ்மார்ட்களுக்கான ஆண்ட்ராய்டு 16 அப்டேட் ஆனது ரியல்மி யுஐ 7.0 ஸ்கின் உடன் வரும். இது பல புதிய அம்சங்கள், கஸ்டமைசேஷன்கள் மற்றும் சிஸ்டம் முழுவதுமான அர்த்தமுள்ள மாற்றங்களை கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கசப்பான உண்மை என்னவென்றால், பல ரியல்மி பயனர்கள் இந்த பெரிய அப்டேட்டை தவறவிடுவார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
List of Realme Smartphones Wont get Android 16 Realme UI 7 0 Update Including GT Narzo C Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X