ஆன்ட்ராய்டு ஜெல்லி பீனை அப்டேட் செய்ய வரிசை கட்டிய நிறுவனங்கள்..!!

By Karthikeyan
|
ஆன்ட்ராய்டு ஜெல்லி பீனை அப்டேட் செய்ய வரிசை கட்டிய நிறுவனங்கள்..!!

கூகுளின் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தின் மீதுள்ள மோகம் இப்போது குறைந்து அந்த அதிதீத மோகம் இப்போது ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தின் மீது சாய்ந்திருக்கிறது. ஏனெனி்ல தற்போது நிறைய மொபைல் நிறுவனங்கள் தங்களது மொபைல் மற்றும் டேப்லெட்டுகளுக்கு இந்த ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் செய்ய வரிசையில் இருக்கின்றன.

எந்த எந்த நிறுவனங்கள் எல்லாம் இந்த வரிசையில் காத்திருக்கின்றன என்று கீழே பார்க்கலாம்.

தற்போது மொபைல் சந்தையில் முன்னிலையில் இருக்கும் சாங்சங் தனது கேலக்ஸி எஸ்3, எஸ்2 மற்றும் கேலக்ஸி நோட் ஆகிய ஸ்மார்ட் போன்களில் ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் செய்ய வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறது. அதோடு சாம்சங்கின் நெக்சஸ் எஸ் மற்றும் நெக்சஸ் ப்ரைம் ஆகியவை ஏற்கெனவே இந்த அப்டேட்டைப் பெற்றுவிட்டன.

அடுத்ததாக எச்டிசி நிறுவனம் தனது ஒன் எக்ஸ், ஒன் எக்ஸ்எல் மற்றும் ஒன் எஸ் ஆகிய சாதனங்களுக்கு இந்த அப்டேட்டைத் தொடங்கி இருக்கிறது.

சோனியை எடுத்துக் கொண்டால் அந்நிறுவனம் தனது எக்பீரியா 2012 வரிசையில் வரும் எக்ஸ்பீரிய எஸ், எக்ஸ்பீரியா பி மற்றும் எஸ்பீரிய நியோ ஆகிய சாதனங்களில் விரைவில் இந்த அப்டேட்டை நடத்த இருக்கிறது.

தற்போது மோட்டோரோலாவை வைத்திருக்கும் கூகுள் தனது சூம் டேப்லெட்டுகளுக்கு இந்த அப்டேட்டை ஏற்கனவே வழங்கிவிட்டது. மேலும் ரேசர் வரிசையில் வரும் அட்ரிக்ஸ் 2 டேப்லெட்டுக்கு விரைவில் இந்த அப்டேட்டை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

எல்ஜி நிறுவனமும் தன் பங்குக்கு வரும் ஜனவரி 2013ல் தனது எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி போனுக்கு இந்த ஜெல்லி பீன் இயங்கு தளத்தை வழங்க இருக்கிறது.

அதுபோல் ஆசஸ் நிறவனம் இந்தியாவில் விற்பனையாகும் தனது ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டிஎப் 201 மற்றும் டிஎப்101 ஆகிய டேப்லெட்டுகளுக்கு விரைவில் இந்த அப்டேட்டைச் செய்ய இருக்கிறது.

ஏசர் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது ஐகோனியா எ500 மற்றும் எ501 டேப்லெட்டுகளுக்கு விரைவில் ஜெல்லி பீனை வழங்க இருக்கிறது.

இந்திய நிறுவனமான கார்போன், ஏற்கனவே தனது ஜெல்லி பீன் டேப்லெட்டான ஸ்மார்ட் டேப்1ஐ ஏற்கனவே களமிறக்கிவிட்டது.

மேற்சொன்ன நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் இன்னும் நிறைய நிறுவனங்கள் ஜெல்லி பீனை வழங்க இருக்கின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X