Home
News

ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்க வெயிட்டிங்கா?- அதே விலையில் இந்த ஸ்மார்ட்போனும் இருக்கே!

ஸ்மார்ட்போன் உலகளவில் பெரிதளவு மாற்றத்தை ஏற்படுத்த களமிறங்க இருக்கிறது, மிகவும் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன், ரிலையன்ஸ் கூகுள் இணைந்த தயாரிக்கும் ஸ்மார்ட்போன் என சமீபத்திய பேசு பொருளாக இருப்பது ஜியோபோன். ரிலையன்ஸ் மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஜியோ போன் விவரக்குறிப்புகள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த போனின் விலையையும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜியோபோன் விரைவில் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு செய்ய காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

முன்பதிவு செய்ய காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

ஜியோபோன் வருகைக்கு காத்திருந்து அதை முன்பதிவு செய்ய காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில சாதனங்கள் சந்தையில் இருக்கிறது. சியோமி மற்றும் ரியல்மியின் மாடல்கள் ஜியோ போன் உடன் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. ஒரு போனை வாங்குவதற்கு முன்பு பல சாதனங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம். போன்களின் விலை, கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி ஆயுள் கவனிக்க வேண்டியது முக்கியமாகும். ஜியோபோன் உடன் தனித்து நிற்கும் இரண்டு போன்களின் குறித்து பார்க்கலாம்.

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை

இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் விலை ரூ.6499 ஆக இருக்கிறது. ஜியோ பல கட்டண முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு பல இஎம்ஐ விருப்பங்களும் வழங்கப்படுகின்றன. ஜியோ போனை ஆரம்பத்தில் ரூ.1999 செலுத்தி மீதமுள்ள தொகையை இஎம்ஐ மூலம் செலுத்தலாம். மீதமுள்ள தொகையை மாதம் ரூ.350 வீதம் 18 மாதங்கள் செலுத்தி வாங்கலாம்.

தினசரி இலவச டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள்

தினசரி இலவச டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள்

தினசரி இலவச டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் உள்ளடக்கிய பெரிய திட்டங்களும் இதனுடன் வழங்கப்படுகின்றன. முன்பணமாக ரூ.1999 செலுத்தி 24 மாதங்களுக்கு மாதம் ரூ.500 மற்றும் 18 மாதங்களுக்கு ரூ.550 செலுத்தி வாங்கலாம். அதேபோல் டபுள் எக்ஸ்எல் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 24 மாதங்களுக்கு மாதம் ரூ.550 அல்லது 18 மாதங்களுக்கு ரூ.600 செலுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு முன்பணம் ரூ.1999 ஆகும். இந்த திட்டமானது 5.45 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது.

இணையான மாற்று போன்கள்

இணையான மாற்று போன்கள்

இதற்கு இணையான மாற்று போன்கள் குறித்து பார்க்கையில், சியோமி இந்திய சந்தையில் ரூ.6799-க்கு தங்கள் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ மூலம் இயக்கப்படுகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, செல்பி வசதிக்கென 5 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. ஆனால் ஜியோபோனில் செல்பி வசதிக்கு 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கிறது. அதோடு 5000 எம்ஏஎச் பேட்டரி ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் பொறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தில் 3500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது.

ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி தனது சி11 ஸ்மார்ட்போனை ரூ.6699-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் போனின் சேமிப்பு திறனை பொறுத்தவரையில் இதில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. கேமரா அம்சத்தை பொறுத்தவரையில் ரியல்மி சி11 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் உள்ளடக்கிய இரண்டு கேமராக்கள் உள்ளன. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

அதன் விலைப் பிரிவில் கிடைக்கும் பிற ஸ்மார்ட்போன்கள்

அதன் விலைப் பிரிவில் கிடைக்கும் பிற ஸ்மார்ட்போன்கள்

ஜியோபோன் நெக்ஸ்ட் மற்றும் அதன் விலைப் பிரிவில் கிடைக்கும் பிற ஸ்மார்ட்போன்கள் குறித்த தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிட்டு எந்த சாதனம் வாங்க வேண்டும் என்பதை தீர்மானித்து வாங்கலாம். அதேபோல் ஜியோ போன் ஆனது ரிலையன்ஸ் மற்றும் கூகுள் உடன் இணைந்து தயாரிக்கப்படுவதால் கூகுளின் சில குறிப்பிட்ட அணுகல்கள் தாராளமாக கிடைக்கலாம். அதேபோல் ஜியோ மலிவு விலையில் 4ஜி இணைய சேவையை வழங்குகிறது. எனவே ஜியோ போனை ஜியோ சிம் உடன் பயன்படுத்தும் போது கூடுதல் சலுகைகள் கிடைத்தாலும் ஆச்சரியப்படுதவதற்கு ஒன்றுமில்லை.

Best Mobiles in India

English summary
List of other smartphones available in the Jiophone Next price range
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X