டிஸ்பிளேவில் க்ரீன் லைன்.. பழைய OnePlus மாடல்களை வாங்கும் முன் கட்டாயம் இதை தெரிஞ்சுகோங்க!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில்.. மிட்-ரேன்ஜ் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒரு வலுவான இடத்தில் இருந்தாலும் கூட, ஒன்பிளஸ் நிறுவனத்தின் பல ஸ்மார்ட்போன்கள் கிரீன் லைன் சிக்கலுக்குள் விழுந்துள்ளன. இந்த சிக்கல் ஏற்பட பல உள்ளது காரணங்கள் உள்ளது. ஆனால் பணம் கொடுத்து வாங்கிய வாடிக்கையாளர்கள் அந்த காரணங்களை தெரிந்துகொண்டு என்ன செய்ய முடியும்?
க்ரீன் லைன் சிக்கலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு அல்லது ரீப்பிளேஸ்மென்ட் அல்லது இலவச ரிப்பேர் ஆகியவைகள் மட்டுமே தேவை; காரணங்கள் அல்லது விளக்கங்கள் அல்ல. அப்படியாக ஒருவேளை நீங்கள் பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டு இருந்தால்.. இதுவரை க்ரீன் லைன் சிக்கலால் பாதிக்கப்பட்ட எல்லா ஒன்பிளஸ் மாடல்களை பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதோ அந்த லிஸ்ட்:

க்ரீன் லைன் சிக்கலை எதிர்கொண்ட ஆரம்பகால மாடல்களில் ஒன்று - ஒன்பிளஸ் 8 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். ஒன்பிளஸ் 8 (OnePlus 8), ஒன்பிளஸ் 8 ப்ரோ (OnePlus 8 Pro) மற்றும் ஒன்பிளஸ் 8டி (OnePlus 8T) ஆகிய 3 மாடல்களுமே இந்த சிக்கலை எதிர்கொண்டன
இதேபோல ஒன்பிளஸ் 9 (OnePlus 9) மற்றும் ஒன்பிளஸ் 9ஆர் (OnePlus 9R) ஆகிய மாடல்களை உள்ளடக்கிய ஒன்பிளஸ் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் கூட க்ரீன் லைன் சிக்கலை எதிர்கொண்டன. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இலவச லைஃப்டைம் ஸ்க்ரீன் வாரண்டியை வழங்குவதாக ஒன்பிளஸ் பிராண்ட் அறிவித்தது. பின்னர் 2022 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் 10 சீரீஸின் கீழ் அறிமுகமான ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலும் இந்த பட்டியலில் சேர்ந்தது.
துரதிர்ஷ்டவசமாக புதிய ஜெனரேஷன் மாடல்களாக பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் 12 சீரீஸிலும் கூட, ஒன்பிளஸ் நிறுவனத்தால் இந்த சிக்கலை நீக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 11 (OnePlus 11), ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R), ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஆகிய மாடல்களுக்கு ரீப்பிளேஸ்மென்ட்க்கான லைஃப்டைம் வாரண்டியை அறிவித்தது.
இந்த க்ரீன் லைன் சிக்கல் ஒன்பிளஸ் பிராண்டின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் காணப்பட்டது. இதில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (Nord CE 3), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 (Nord CE 2), ஒன்பிளஸ் நோர்ட் 2 (Nord 2), ஒன்பிளஸ் நோர்ட் 3 (Nord 3) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் (Nord 4) ஆகியவைகள் அடங்கும்.
இவ்வளவு மாடல்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க காரணம். இந்நிறுவனம், அதன் லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடல் உட்பட, தனது பிராண்டின் கீழ் உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போனிற்கும் க்ரீன் லைன் வொர்ரி-ப்ரீ சொல்யூஷன் உடனான லைஃப்டைம் வாராண்டியை வழங்குகிறது.
அடுத்துவரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) அல்லது ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடல் அறிமுகம் செய்யப்படலாம். இது 2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் (2025 Q3) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2025 ஏப்ரல் - ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் 13 மினி என்ன ஸ்பெஷல் ஆக இருக்கும்? நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர்களில் ஒருவரா டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸில் இருந்து வரவிருக்கும் "சிறிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" (Small Flagship Smartphone) ஆனது உயர்நிலை செயல்திறன் (High-end performance) மற்றும் நீண்ட பேட்டரி லைஃப்பை (Long battery life) வழங்கும்.
மேலும் ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி மாடல் ஆனது இன்டர்நேஷனல் ஆஸ்தெட்டிக் (International aesthetic) உடனான மிகவும் சிம்பிள் ஆன கேமரா யூனிட்டை (Simple Camera Unit) கொண்டிருக்கும் என்றும், இது பார்ப்பவர்களை டக்கென்று ஈர்க்கும் படியான.. மிகவும் அழகான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்றும் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








