Home
News

Amazon கிரேட் இந்தியன் Sale 2022: தெரியாம கூட "இதை" மிஸ் பண்ணிடாதீங்க!

எப்போது முதல் ஆரம்பிக்கும் என்கிற தேதியை அறிவிக்காமலேயே.. கடந்த சில நாட்களாக நம்மில் பலரையும் டெம்ப்ட் ஏற்றி வந்தது - அமேசானின் தி கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2022 (Amazon Great Indian Festival 2022)!

இதற்கிடையில்.. ஒருவழியாக அமேசானின் அடுத்த சிறப்பு விற்பனையானது சரியாக எப்போது தொடங்கும், என்னென்ன ஆபர்களை வழங்கும் என்கிற விவரங்கள் வெளியாகி உள்ளது!

வழக்கம் போல Prime Members-க்கு முன்கூட்டியே அணுகல் கிடைக்குமா?

வழக்கம் போல Prime Members-க்கு முன்கூட்டியே அணுகல் கிடைக்குமா?

கண்டிப்பாக! இந்தியாவின் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான், அதன் அடுத்த சிறப்பு விற்பனையின் போதும், வழக்கம் போல அதன் ப்ரைம் மெம்பர்களுக்கான முன்கூட்டிய அணுகலை வழங்கும்.

சரி வாருங்கள், இந்த விற்பனை எப்போது தொடங்குகிறது? என்னென்ன பிராண்டுகள் வரிசைகட்டி ஆபர்களை வழங்க உள்ளன? என்ன மாதிரியான கேஷ்பேக், ரிவார்ட்ஸ் கிடைக்கும்? என்று விரிவாக பார்க்கலாம்!

செப்டம்பர் 23 முதல்!

செப்டம்பர் 23 முதல்!

அமேசான் இந்தியா தனது அடுத்த கிரேட் இந்தியன் பெஸ்டிவலுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. அது செப்டம்பர் 23, 2022 அன்று தொடங்குகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த விற்பனையின் போது அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு, ஒரு நாள் முன்கூட்டியே தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கான அணுகல் கிடைக்கும்.

என்னென்ன பிராண்டுகள் மீது ஆபர்கள் அள்ளும்?

என்னென்ன பிராண்டுகள் மீது ஆபர்கள் அள்ளும்?

வரவிருக்கும் அமேசான் சிறப்பு விற்பனையில் Samsung, iQOO, Mi, Redmi, Apple, OnePlus, LG, Sony, BoAt, HP, Lenovo, Fire-Boltt, Noise, Vu, TCL மற்றும் Acer போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளின் மீது "எக்கச்சக்கமான" தள்ளுபடிகள் அணுக கிடைக்கும்.

அதுமட்டுமன்றி, இந்த அமேசான் கிரேட் இந்தியன் சிறப்பு விற்பனையின் போது 2000 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன!

வழக்கம் போல இம்முறையும் Flipkart.. வம்புக்கு நிற்கும்!

வழக்கம் போல இம்முறையும் Flipkart.. வம்புக்கு நிற்கும்!

ஆம்! அமேசான் இந்தியாவின் அடுத்த ஸ்பெஷல் சேல் ஆனது வருகிற செப்டம்பர் 23 தொடங்கும் நிலைப்பாட்டில், மற்றொரு பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டும் அதன் அடுத்த சிறப்பு விற்பனையை செப்டம்பர் 23 மற்றும் செப்டம்பர் 30 க்கு இடையில் நடத்துகிறது.

அறியதோர்களுக்கு, Flipkart-இன் அடுத்த சிறப்பு விற்பனையானது The Big Billion Days (TBBD) என்கிற பெயரின் கீழ் நடக்கும்.

Amazon Great Indian Festival 2022-இல் கவனிக்க வேண்டிய தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்!

Amazon Great Indian Festival 2022-இல் கவனிக்க வேண்டிய தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்!

அமேசான் இந்தியா தளமானது, தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது, ​​வாடிக்கையாளர்கள் ரூ.7,500 வரையிலான ரிவார்ட்களை வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் Amazon.in வழியாக ஷாப்பிங் செய்வதன் மூலமோ அல்லது பில்களை செலுத்துவதன் மூலமோ, அல்லது தங்கள் ஸ்மார்ட்போன்களை ரீசார்ஜ் செய்வதன் மூலமோ, அல்லது Amazon Pay-வை பயன்படுத்தி பணத்தை 'ஆட்' செய்வதன் வழியாக அல்லது பணத்தை அனுப்புவதன் மூலமோ இந்த தள்ளுபடிகளை பெறலாம்!

ரூ.50 கேஷ்பேக்..

ரூ.50 கேஷ்பேக்..

அமேசான் நிறுவனத்தின் கூற்றுப்படி, பில் செலுத்துதல், ரீசார்ஜ் செய்தல் மற்றும் பலவற்றிற்காக முதல் முறையாக அமேசான் பே-வை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் கிடைக்கும்.

ரூ. 2,500 மதிப்புள்ள..

ரூ. 2,500 மதிப்புள்ள..

அதே போல Amazon Pay ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரவேற்பு சலுகையாக ரூ. 2,500 மதிப்புள்ள ரிவார்ட்ஸ் கிடைக்கும்.

மேலும் Amazon Pay Later-ஐ ஆக்டிவேட் செய்பவர்கள் ரூ.150 கேஷ்பேக் உடனாக இன்ஸ்டன்ட் கிரெடிட் ஆக ரூ.60,000 வரை பெறுவார்கள்.

10% தள்ளுபடி..

10% தள்ளுபடி..

மேலும் Amazon Pay UPI க்கு பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 வரை கேஷ்பேக் கிடைக்கும் என்றும், Amazon Pay கிஃப்ட் கார்டை வாங்குபவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என்றும் Amazon India அறிவித்துள்ளது.

எக்கோ, ஃபயர் டிவி, கின்டெல் ரேன்ஞ்ச் டிவைஸ்கள் மற்றும் அலெக்சா ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்கள் போன்ற அமேசான் தயாரிப்புகளின் மீது பல வகையான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும் என்றும் அமேசான் கூறியுள்ளது.

Photo Courtesy: Amazon, Twitter

Best Mobiles in India

English summary
List of Offers Discounts to Available in Amazon Great Indian Festival 2022 Which Starts September 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X