சோனா முத்தா போச்சா.. இந்த Motorola போன்கள் உங்ககிட்ட இருந்தா.. உங்களுக்கு ஒரு பேட் நியூஸ்!
ஆண்ட்ராய்டு 15 காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் கூகுள் நிறுவனம் அதன் புதிய ஓஎஸ் ஆன ஆண்ட்ராய்டு 16-ஐ (Android 16) வெளியீட தயாராகி வருகிறது. கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் போன்களுக்கு, வருகிற ஜூன் மாதத்தில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ வெளியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது முந்தைய ஓஎஸ் வெளியீடுகளை விட மிகவும் முன்னதாக ஆண்ட்ராய்டு 16 ரிலீஸ் நடக்கவுள்ளது!
இதனை தொடர்ந்து, மற்ற நிறுவனகளும் விரைவான ஆண்ட்ராய்டு 16 ரிலீஸ்-க்கு தயாராக வேண்டும். இந்த பட்டியலில் மோட்டோரோலா நிறுவனமும் உண்டு. ஆனால் இங்கே "பேட் நியூஸ்" என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக விற்பனையில் சக்கைபோடு போட்ட பல மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 உட்பட எந்த ஓஎஸ் அப்டேட்களையும் பெறபோவதில்லை.

ஏனென்றால் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட் உடன் ஓஎஸ் அப்டேட் ரோட்மேப் முடிவுக்கு வருகிறது. இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் நிறுவனத்தின் எட்ஜ் சீரிஸ், ரேஸர் சீரீஸ், மோட்டோ ஜி சீரீஸ், மோட்டோ இ சீரீஸ் ஆகியவைகளும் அடங்கும். அதென்ன மாடல்கள் இதோ விவரங்கள்:
மோட்டோரோலா எட்ஜ் சீரீஸ்:
* மோட்டோரோலா எட்ஜ் 40
* மோட்டோரோலா எட்ஜ் 40 நீயோ
* மோட்டோரோலா எட்ஜ்+ (2023)
* மோட்டோரோலா எட்ஜ் (2022)
* பழைய எட்ஜ் மாடல்கள்
மோட்டோரோலா ரேஸர் சீரீஸ்:
* மோட்டோரோலா ரேஸர் 2022
* மோட்டோரோலா ரேஸர்
* பழைய ரேஸர் மாடல்கள்
மோட்டோரோலா மோட்டோ ஜி சீரீஸ்:
* மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2024) / ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023)
* மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) / ஜி பவர் 5ஜி (2023)
* மோட்டோ ஜி (2024) / ஜி (2023)
* மோட்டோ ஜி84 / ஜி82
* மோட்டோ ஜி73 / ஜி72 / ஜி71 / ஜி71எஸ்
* மோட்டோ ஜி64 / ஜி62 / ஜி60 / ஜி60எஸ்
* மோட்டோ ஜி54 / ஜி54 பவர் / ஜி53 / ஜி52
* மோட்டோ ஜி45 / ஜி42
* மோட்டோ ஜி34 / ஜி32
* மோட்டோ ஜி24 / ஜி24 பவர் / ஜி23
* மோட்டோ ஜி15 / ஜி15 பவர் / ஜி14 / ஜி13
* மோட்டோ ஜி05 / ஜி04 / ஜி04எஸ்
* மோட்டோ ஜி பிளே (2024) / ஜி பிளே (2023)
* பழைய மோட்டோ ஜி மாடல்கள்
மோட்டோரோலா மோட்டோ இ சீரீஸ்:
* மோட்டோ இ32 / இ32எஸ்
* மோட்டோ இ22 / இ22ஐ / இ22எஸ்
* மோட்டோ இ13 / இ14 / இ15
* பழைய மோட்டோ இ மாடல்கள்
மோட்டோரோலா டேப்லெட்கள்:
* மோட்டோ டேப் ஜி70
* மோட்டோ டேப் ஜி62
* மோட்டோரோலா டேப் ஜி20
* லெனோவோ மோட்டோ டேப்
உண்மையில் மோட்டோரோலா நிறுவனம் சீரற்ற சாஃப்ட்வேர் அப்டேட் கொள்கையை தான் கொண்டுள்ளது. உதாரணமாக, எட்ஜ் 50 ப்ரோ மற்றும் எட்ஜ் 50 நியோவை எடுத்துக் கொள்ளுங்கள், இது 5 மேஜர் ஓஎஸ் அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய எட்ஜ் 60 மாடல்கள் 3 அப்டேட்களை மட்டுமே பெறுகிறது
மேலும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ரேஸர் 2025 மாடல்கள் கூட, மூன்று ஓஎஸ் அப்டேட்களை மட்டுமே உறுதியளிக்கின்றன. ஒருவேளை நீங்கள் மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் மாடல்களை தேர்வு செய்தால் விஷயங்கள் இன்னும் மோசமாக இருக்கும். ஏனென்றால் அவற்றில் பெரும்பாலானவை 2 மேஜர் ஓஎஸ் அப்டேட்களை மட்டுமே பெறுகின்றன.


Click it and Unblock the Notifications








