Home
News

10 தலை இராவணன் போல வந்த ChatGPT! யாரோட வேலைக்கு எல்லாம் ஆப்பு தெரியுமா? இதோ லிஸ்ட்!

ChatGPT அறிமுகமாகிய சில வாரங்களில், உலகம் முழுக்க சாட்ஜிபிடி-யை பற்றி தான் பேச்சு. சிலர் இதை வரம் என்று நினைத்தாலும், பலருக்கு ChatGPT ஒரு சாபமாக மாறியுள்ளது. குறிப்பாக சில துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ChatGPT ஒரு வில்லனாக மாறியுள்ளது.

வில்லன் என்றதும் சாதாரண வில்லன் என்று நினைத்துவிடாதீர்கள். இராமாயணத்தில், ராமனையே திணறவிட்ட கொடூரமான 10 தலை கொண்ட இராவணன் போன்ற ஒரு வில்லனாக ChatGPT இப்போது உருமாறியுள்ளது. மனிதர்களின் வேலையை சுலபமாக்கும் நோக்கத்திற்காக இந்த சாட்ஜிபிடி உருவாக்கப்பட்டது என்று கூறினாலும், இது இப்போது சில மனித வாழ்க்கைக்கு யமனாக மாறியுள்ளது.

10 தலை இராவணன் போல வந்த ChatGPT! யாரோட வேலைக்கு எல்லாம் ஆப்பு தெரியுமா

இதை நாங்கள் சொல்ல விலை மக்களே, சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. ChatGPT என்ற இந்த அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தளம் காரணமாக, உலகளவில் உள்ள பல கோடி மக்களின் வேலையை எப்படி இந்த AI திருடப்போகிறது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இதிலும், குறிப்பாக எந்த துறையில் உள்ள ஊழியர்களின் வேலை விரைவில் பறிபோகும் ஆபத்தில் உள்ளதென்ற தகவலையும் இந்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

ChatGPT எப்படி செயல்படுகிறது என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். மனிதன் செய்யக்கூடிய வேலையை இது மனிதனை விட சுமார் 50% அதிக வேகத்துடன் முடிந்துவிடுகிறது. ChatGPT பயன்பாட்டை ஆதரிக்கக்கூடிய வேலைகளில் உள்ள ஊழியர்களுக்கு இது நல்ல செய்தி அல்ல. ChatGPT-யின் பயன்பாட்டை ஒரு துறையில் ஈடுபடுத்தும் போது, அது எவ்வளவு சுலபமாக அந்த வேலையை முடிகிறதோ, அந்த துறையில் உள்ளவர்களின் வேலைக்கு ஆப்பு உறுதி என்கிறது ஆய்வின் முடிவு.

இன்னும் எளிமையாகக் கூறவேண்டும் என்றால், ப்ரோக்ராமிங், எழுத்தர்கள் போன்ற துறைகளில் வேலை பார்ப்பவர்களின் வேலைக்கு ChatGPT உலைவைக்கும் என்று கூறப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி, 34 வெவ்வேறு வேலைகளில் உள்ள ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம் உள்ளதென்று கூறப்படுகிறது. இது தொடர்பான ஒரு பட்டியலையும் ஆராய்ச்சி குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

10 தலை இராவணன் போல வந்த ChatGPT! யாரோட வேலைக்கு எல்லாம் ஆப்பு தெரியுமா

குறிப்பாக இந்த ஆய்வின்படி, குறைந்த ஊதியத்துடன் ஒப்பிடும்போது அதிக ஊதியம் பெறும் வேலைகள் தானாகவே இயங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால், அதிக ஊதியம் பெரும் ஊழியர்களின் நிலை மோசமாகவுள்ளது என்று கூறப்படுகிறது. விஞ்ஞான மற்றும் விமர்சன சிந்தனைத் திறன்களைச் சார்ந்திருக்கும் மக்களுக்கு சாட்ஜிபிடியால் பெரியளவு ஆபத்து இருக்காது.

மறுபுறம், புரோகிராமிங் மற்றும் எழுதுவதில் தேர்ச்சி தேவைப்படும் வேலைகள் மற்றும் இது சார்ந்த துறைகளில் இருக்கும் ஊழியர்களின் வேலை வாய்ப்புகளை ChatGPT-யால் திருடப்பட அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இணையம் மற்றும் டிஜிட்டல் இடைமுக வடிவமைப்பாளர்கள், பிளாக்செயின் பொறியாளர்கள், வரி தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களின் வேலையை ChatGPT திருட அதிக வாய்ப்புள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கள்
ஆய்வு ஆராய்ச்சியாளர்கள்
கவிஞர்கள்
பாடலாசிரியர்கள் மற்றும் படைப்பாற்றல் எழுத்தாளர்கள்
ஆய்வு விஞ்ஞானிகள்
மக்கள் தொடர்பு நிபுணர்கள்
எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்
மக்கள் தொடர்பு நிபுணர்கள்
கணிதவியலாளர்கள்
வரி தயார் செய்பவர்கள்
நிதி அளவு ஆய்வாளர்கள்
இணையம் மற்றும் டிஜிட்டல் இடைமுக வடிவமைப்பாளர்கள்

கடித எழுத்தர்கள்
பிளாக்செயின் பொறியாளர்கள்
நீதிமன்ற நிருபர்கள்
தலைப்பு உருவாக்கும் கேப்ஷனர்கள்
சரிபார்ப்பவர்கள் மற்றும் நகல் குறிப்பாளர்கள்
கணக்காளர்கள் மற்றும் தணிக்கையாளர்கள்
செய்தி ஆய்வாளர்கள்
நிருபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்
சட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாக உதவியாளர்களின் வேலையை சாட்ஜிபிடி (ChatGPT) திருட வாய்ப்புள்ளது.

இதை வைத்துப் பார்க்கையில், இப்போது இல்லாவிட்டாலும், வெகு விரைவிலோ அல்லது எதிர்காலத்திலோ அல்லது எப்போதோ ஒரு நேரத்தில், ChatGPT-யால் நிச்சயம் பல கோடி மக்களின் வேலை பறிபோகும் என்பது தெளிவாகியுள்ளது. ChatGPT பற்றி உங்களின் கருத்து என்ன? என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
List Of Jobs That Are At Very High Risk Due To ChatGPT
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X