அடேங்கப்பா.. பட்ஜெட் விலையில் 3ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள்: அசத்தும் ஜியோ மற்றும் ஏர்டெல்.!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான திட்டங்கள் மற்றும் அருமையான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்நிறுவனம் தற்போது 5ஜி சேவையை வழங்கி வருகின்றன.
தற்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பல நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டன. கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தினசரி 3ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளன. இப்போது அந்த திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.419 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் இதில் கிடைக்கிறது.
ஏர்டெல்ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.499 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.1199 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் இதில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் சந்தா, Xtream App, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் 2ஜிபி டேட்டா திட்டங்களை தேர்வு செய்வதை விட 3ஜிபி டேட்டா தரும் திட்டங்களை தேர்வு செய்வது மிகவும் நல்லது. குறிப்பாக இந்த திட்டங்களில் பல்வேறு பலன்கள் உள்ளன என்றே கூறலாம். மேலும் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒரு புதிய திட்டத்தை இப்போது பார்ப்போம்.

புதிய ஏர்டெல் ரூ.155 திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. கூடுதலாக, பயனர்களுக்கு Wynk Music மற்றும் Free Hellotunes போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications