3 iPhone மாடல்களின் கதையை முடிச்சு விட்ட Apple.. உங்ககிட்ட இருக்குற ஐபோன் இந்த லிஸ்ட்ல இருக்கா?
ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐஓஎஸ் 19 (iOS 19) அப்டேட் ஆனது வருகிற 2025 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகமாக உள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் பல ஐபோன் மாடல்கள் - புதிய அம்சங்களை பெற உள்ளன. ஆனால் எல்லா ஐபோன்களும் அதை பெறும் அளவுக்கு அதிர்ஷ்டசாலிகளாக இல்லை
எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு ஐஓஎஸ் 19 அப்டேட் கிடைக்கும் என்கிற பட்டியலோடு, எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு ஐஓஎஸ் 19 அப்டேட் கிடைக்காது என்கிற பட்டியலும் உள்ளது. உங்களிடம் சற்றே பழைய, உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் கீழ்வரும் 3 பழைய மாடல்களுக்கு தான் ஐஓஎஸ் 19 அப்டேட் கிடைக்கபோவது இல்லை.

என்னென்ன மாடல்கள்? ஐபோன் எக்ஸ்எஸ் (iPhone XS), ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் (iPhone XS Max) மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் (iPhone XR) ஆகிய 3 மாடல்களும் ஐஓஎஸ் 19 அப்டேட்டை பெறாது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் ஒருவழியாக ஏ12 பயோனிக் சிப் கொண்டு இயங்கும் ஐபோன்களுக்கு விடை கொடுக்க உள்ளதை வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது.
எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு ஐஓஎஸ் 19 அப்டேட் கிடைக்கும்?
ஐபோன் 11 சீரீஸ் (iPhone 11 series)
ஐபோன் 12 சீரீஸ் (iPhone 12 series)
ஐபோன் 13 சீரீஸ் (iPhone 13 series)
ஐபோன் 14 சீரீஸ் (iPhone 14 series)
ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 series)
ஐபோன் 16 (iPhone 16)
ஐபோன் 16இ (iPhone 16e)
ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus)
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max)
ஐபோன் எஸ்இ 2 (iPhone SE 2)
ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3)
இந்தியாவில் எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக புதிய ஆப்பிள் ஏஐ அம்சங்கள் கிடைக்கும்?
ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro)
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max)
ஐபோன் 16 (iPhone 16)
ஐபோன் 16இ (iPhone 16e)
ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus)
ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro)
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max)
ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக ஐபோன்களுக்கு என்னென்ன புதிய அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன? முன்னதாக இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்கள் - டீபால்ட் லேங்குவேஜ் ஆக யுஎஸ் இங்கிலீஷ்-ஐ செட் செய்வதன் மூலம் ஏஐ அம்சங்களை பயன்படுத்த ஆப்பிள் அனுமதித்து. தற்போது ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக உள்ளூர் மொழிகளுக்கு மாறுகிறது. தற்போது ஆப்பிள் ஏஐ-க்கான ட்ராப்-டவுன் மெனுவிலிருந்து இந்தியன் இங்கிலீஷ் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
மேலும் சிரி உடனான புதிய உரையாடல் - இந்தி, தமிழ், மராத்தி, பங்களா, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளில், ஆங்கிலத்துடனும் கலந்து பேசலாம். இந்த மாற்றம் கால் செய்ய, ஆப்பிள் மேப்ஸ்-ல் இடங்களை கண்டறிய மற்றும் உங்களுக்குப் பிடித்த பாடல்களை பிளே செய்ய பயனுள்ளதாக இருக்கும்.
ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக ஆப்பிள் நிறுவனமானது பயனர்களுக்கு முக்கியமானதாக கருதப்படும் அலெர்ட்களை வழங்கவும் ஏஐ-ஐ பயன்படுத்துகிறது. இந்த அம்சம் இயல்பாகவே முடக்கப்பட்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதியளிக்கிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபோன் மாடல்களில் இந்த புதிய ஏஐ அம்சத்தை முயற்சிக்க விரும்பும் ஐபோன் பயனர்கள் , செட்டிங்ஸ் > நோட்டிபிகேஷன்ஸ் என்கிற விருப்பத்தை அணுகலாம்
ஆப்பிளின் ஏஐ இமேஜ் டூல் தற்போதுள்ள அனிமேஷன் மற்றும் இல்லுஸ்ட்ரேஷன் வகைகளுடன் ஸ்கெட்ச் விருப்பத்தையும் பெறுகிறது. இந்த ஸ்டைலில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து, ஐபோனில் உள்ள இமேஜ் பிளேகிரவுண்ட் ஆப்பை பயன்படுத்தி, தேவையான ப்ராம்ப்ட்-ஐ வழங்குவதன் மூலம் ஏஐ அடிப்படையிலான இமேஜை உருவாக்கலாம்
ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக ரைட்டிங் டூல்கள் ஆனது ஆப்பிள் ஏஐ-ஐ பயன்படுத்தி (சில மூன்றாம் தரப்பு ஆப்ளுடன் சேர்ந்து) இமெயில், மெசேஜ்கள் மற்றும் நோட்களில் உள்ள டெக்ஸ்ட்டை-ஐ ரீரைட் செய்யவோ அல்லது சம்மரைஸ் செய்யவோ உதவும். இந்த அம்சங்கள் ஐபோன்கள் மட்டுமின்றி மேக்புக் மாடல்கள் மற்றும் ஐபாட் மாடல்களிலும் வேலை செய்யும்
கடைசியாக, ஐஓஎஸ் 18.4 அப்டேட் ஆனது போட்டோஸ் ஆப்பில் உள்ள படங்களை க்ளீன் செய்ய ஆப்பிள் ஏஐ-ஐ பயன்படுத்துகிறது மற்றும் எளிய விளக்கங்களை பயன்படுத்தி படங்களைத் தேடுவதற்கான சிறந்த வழியையும் கொடுக்கிறது. மேலும் க்ளீன் அப் வழியாக போட்டோவில் உள்ள குறிப்பிட்ட பகுதியை அல்லது பொருளை அகற்றவும் செய்யலாம். சுவாரசியமாக இந்த அம்சங்கள் வீடியோக்களுக்கும் வேலை செய்யும், இது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இரண்டையும் பயன்படுத்தி மெமரிகளை உருவாக்கும் ஒரு டூலாகவும் வேலை செய்யும்.


Click it and Unblock the Notifications








