OTT சந்தாவை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
சமீபத்தில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று வரை குறைவான விலையில் அதிக நன்மையை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும்பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனால் இந்நிறுவனம் 4ஜி சேவையை விரைவில் கொண்டுவந்தால் இன்னும் அருமையாக இருக்கும். மேலும் இப்போது OTT சந்தாவை வழங்கும் பிஎஸ்என்எல்நிறுவனத்தின் ப்ரீபெய்ட்ட திட்டங்களை விரிவாகப் பார்ப்போம்.

OTT சந்தாவை வழங்கும் திட்டங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 80 Kbps வேகத்தில் இணையத்தைப்
பயன்படுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள்கிடைக்கும். இதுதவிர EROS Now என்டர்டெயின்மென்ட் சர்வீசஸ் உடன் BSNL ட்யூன்களுக்கான அணுகலுடன் இந்தத் திட்டம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ரூ.251 விலையில் கிடைக்கும் இந்த திட்டம் Data_WFH_251 எனப்படும் டேட்டா பேக் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த ரூ.251 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 70ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்புஇந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் Zing OTT இயங்குதளத்திற்கான சந்தாவுடன்
வருகிறது. இந்தத் திட்டத்தை வாங்க ஆர்வமுள்ள பயனர்கள் BSNL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'டேட்டா வவுச்சர்' கீழ் அதைப் பெறலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உட்பட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு தளத்திற்கு 56 நாள் சந்தாவைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது OTT இயங்குதளங்களுக்கான அணுகலுடன் வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 81 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Zing மற்றும் BSNL ட்யூன்களுக்கான அணுகலைப் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 100ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தில் பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை அணுக முடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி
60 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. பின்பு இந்த திட்டத்தில் பயனர்கள் BSNL ட்யூன்ஸ் மற்றும் EROS Now என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான
சந்தாவையும் பெறலாம் .


Click it and Unblock the Notifications








