Home
News

பட்ஜெட் விலையில் கிடைக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்.! முழு விவரம்.!

பிஎஸ்எனஎல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். சில வாரங்களுக்கு முன்பு தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று வரை குறைவான விலையில் அதிக நன்மையை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

 பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது பட்ஜெட் விலையில் கிடைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.97 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.97 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் STV_97 என்று அழைக்கப்படும் ரூ.97 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை கிடைக்கும். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.97 ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ118 ப்ரிபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ118 ப்ரிபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 0.5 டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை எனப் பல்வேறு சலுகைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 80 Kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள்கிடைக்கும். இதுதவிர EROS Nowஎன்டர்டெயின்மென்ட் சர்வீசஸ் உடன் BSNL ட்யூன்களுக்கான அணுகலுடன் இந்தத் திட்டம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.298 ப்ரீபெய்ட்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உட்பட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு தளத்திற்கு 56 நாள் சந்தாவைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
List of BSNL prepaid plans available at budget prices! Full details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X