Flipkart-இல் அடுத்த 3 நாட்களுக்கு பல ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் மழை; இதோ லிஸ்ட்!
நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால், ஜூலை மாதத்தின் முதல் 3 நாட்களை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்!
ஏனெனில் குறிப்பிட்ட 3 நாட்களில், அதாவது ஜூலை 1 - 3 வரையலாக, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஆனது "பிக் பச்சத் தமால்" என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு விற்பனையை நடத்துகிறது.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள்?
வழக்கம் போல இந்த சிறப்பு விற்பனையிலும், பிரபலமான மற்றும் நன்றாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் மீது "தாறுமாறான" ஆபர்கள் மற்றும் விலைகுறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகள் மீது அணுக கிடைக்கும் சலுகைகள் என்னென்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி, மாலை 4 மணிக்கு அலெர்ட் ஆக இருக்கவும்!
ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 ஆம் தேதி முடிவடையும் வரை, அதாவது இந்த Flipkart Big Bachat Dhamal விற்பனை நடக்கும் தேதிகளுக்கு இடையில், சரியாக நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு புதிய டீல்கள் அணுக கிடைக்கும் - வழக்கமாக கிடைக்கும் சலுகைகளோடு சேர்த்து - அதன் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ளவும்.
சரி வாருங்கள், இந்த Flipkart-இன் Big Bachat Dhamal விற்பனையில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத சில ஸ்மார்ட்போன் ஆபர்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஐபோன் 12 மினி
பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையின் போது, 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 12 மினி ஆனது ரூ.64,999 என்கிற தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.74,900 ஆகும்.
மேலும் இந்த மாடல் மீது ரூ.12,500 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அணுக கிடைக்கும். நீங்கள் பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் ரூ.1,500 என்கிற கூடுதல் தள்ளுபடியையும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டை பயன்படுத்தினால் 5% கேஷ்பேக் சலுகையையும் பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி
6ஜிபி ரேம் + 128ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட Samsung Galaxy F23 5G ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.23,999 ஆகும்.
உடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் மீது ரூ.12,500 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அணுக கிடைக்கும். மேலும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் டெபிட் இஎம்ஐ பரிவர்த்தனைகளின் வழியாக கூடுதலாக ரூ.1,000 என்கிற சலுகையையும் நீங்கள் பெறலாம்.

ரியல்மி 9 5ஜி
4ஜிபி ரேம் + 64ஜிஇ இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட Realme 9 5G ஸ்மார்ட்போன் ஆனது, இந்த Flipkart விற்பனையின் போது ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.18,999 ஆகும்
இந்த ஸ்மார்ட்போனின் மீதும் ரூ.12,500 வரை என்கிற எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். மேலும் எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு சில கூடுதல் சலுகைகளும் அணுக கிடைக்கும்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி
ஒருவேளை நீங்கள் ஒரு பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், இன்னும் குறிப்பாக உங்கள் முன்னுரிமை - பேட்டரி மீது இருந்தால், போக்கோ எம்3 ப்ரோ மாடலை பரிந்துரைக்கிறோம்.
இந்த சிறப்பு விற்பனையின் போது, போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.16,499 க்கு பதிலாக ரூ.14,499 க்கு விற்பனை செய்யப்படும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி உள்ளது.

போக்கோ எஃப்4 5ஜி
ஒருவேளை நீங்கள் ரூ.30,000 என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்களானால், Poco F4 5G மாடல் ஒரு சிறந்த ஆப்ஷன் ஆக இருக்கும்.
மெல்லிய வடிவமைப்பு, சிறந்த கேமரா செட்டப்பை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் இந்த பிளிப்கார்ட்டின் விற்பனையின் போது ரூ 27,999 முதல் என்கிற விலைக்கு வாங்க கிடைக்கும். நீங்கள் SBI மற்றும் HDFC பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ 3,000 என்கிற கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம்.

விவோ எக்ஸ்70 ப்ரோ
விவோ நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன Vivo X70 Pro ஆனது இந்த Flipkart Big Bachat Dhamal விற்பனையின் போது ரூ.46,990 க்கு விற்பனை செய்யப்படும். இது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ
இதேபோல், மோட்டோரோலாவின் "சற்றே பழைய" எட்ஜ் 20 ப்ரோ மாடல் ஆனது ரூ.45,999 என்கிற விலைக்கு பதிலாக ரூ.32,999 க்கு விற்பனை செய்யப்படும்.
இது தவிர்த்து வேறு ஏதாவது ஒரு நல்ல ஸ்மார்ட்போன் மீது அட்டகாசமான ஆபர் அறிவிக்கப்பட்டால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்; தொடர்ந்து கிஸ்பாட் தமிழ் வலைத்தளத்தை ஃபாலோ செய்யவும்!


Click it and Unblock the Notifications