Home
News

Airtel , Vi பயனர்களே இனி சாதாரண திட்டத்தை தூக்கி போட்டுவிட்டு இத மட்டும் ரீசார்ஜ் பண்ணுங்க: அதிக நன்மைகள்.!

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மைகள் அதிகமாகவே இருக்கிறது என்றே கூறலாம்.

ஏர்டெல்,  வோடபோன் ஐடியா

ஏர்டெல், வோடபோன் ஐடியா

அதாவது ஏர்டெல் நிறுவனம் தனது திட்டங்களில் விங்க் மியூசிக் பிரீமியம், அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள், ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் போன்ற நன்மைகளை வழங்குகிறது. பின்பு வோடபோன் ஐடியா நிறுவனம் Vi Hero அன்லிமிடெட் நன்மைகள் மற்றும் Vi Movies & TV VIP அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல், வோடபோன்

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது ஏர்டெல், வோடபோன் பயனர்கள் சாதாரண நன்மைகளை வழங்கும் திட்டங்களைத் தவிர்த்து ஓடிடி உடன் பல நன்மைகளைத் தரும் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. இப்போது வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் OTT நன்மை மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (OTT) சந்தாவை வழங்குகிறது. அதேபோல் இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

 ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் கூடுதல் நன்மைகள்

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் கூடுதல் நன்மைகள்

இதுதவிர விங்க் மியூசிக் பிரீமியம், அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள், ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும இந்த திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள்.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட்திட்டத்தின் கூடுதல் நன்மைகள்

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட்திட்டத்தின் கூடுதல் நன்மைகள்

பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், விங்க் மியூசிக் பிரீமியம், அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள், ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3 மாதம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக தினசரி 2.5ஜிபி டேட்டா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்,டேட்டா ரோல்ஓவர் வசதி, Binge all-night, Vi Movies and TV உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், டேட்டா ரோல்ஓவர் வசதி, Binge all-night, Vi Movies and TV உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் வோடபோன் ஐடியா ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், டேட்டா ரோல்ஓவர் வசதி, Binge all-night, Vi Movies and TV உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் வோடபோன் ஐடியா ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
List of Airtel, Vodafone Idea Prepaid plans offering Disney + Hotstar subscription: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X