Airtel பயனர்கள் கவனத்திற்கு: ஒரு மாதம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமா? இந்த பட்டியலை பாருங்க.!
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் தற்போது பல நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டது. கூடிய விரைவில் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்நிறுவனம் சமீபத்தில் ரூ.99 திட்டத்திற்குப் பதிலாக ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. மேலும் ஏர்டெல் நிறுவனம் கூடிய விரைவில் மேலும் சில ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தும் என்று தகவல் வெளிவந்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Wynk மியூசிக், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு இந்த ஏர்டெல் ரூ.319 திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். பட்ஜெட் விலையில் ஒரு நல்ல திட்டத்தைத் தேடும் பயனர்கள் இதைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது.
ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Xstream mobile app அணுகல், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 60ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Wynk மியூசிக், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு இந்த ஏர்டெல் ரூ.509 திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ரூ. 155 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.155 திட்டமானது பயனர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் நிமிடங்களை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. கூடுதலாக, பயனர்களுக்கு Wynk Music மற்றும் Free Hellotunes போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர Hellotunes மற்றும் Wynk Music இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர Hellotunes மற்றும் Wynk Music இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








