84 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக சலுகைகளை வழங்கும் Airtel இன் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்தியது. அதாவது ஏர்டெல் ரூ.99 திட்டத்தின் விலை தற்போது ரூ.155 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் பட்ஜெட் விலையில் பல அசத்தலான திட்டங்களை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம்.
குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை வழங்குகிறது. மேலும் இப்போது 84 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக சலகைகளை வழங்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.455 திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 900 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.
ஏர்டெல் ரூ.719 திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்றுமாதங்களுக்கு அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.839 திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, ரிவார்ட்ஸ்மினி சந்தா மற்றும் Apollo 24|7 Circle போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.
அதேபோல் இப்போது விலை உயர்வு பெற்ற ஏர்டெல் நிறுவனத்தின் புதிய திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம். அதாவது தற்போது புதிய ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வெறும் 24 நாட்கள் மட்டும் வேலிடிட்டியை வழங்குகிறது. பின்பு இதில் 1ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இருந்த ஏர்டெல் ரூ.99 திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி, 200எம்பி டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் போன்ற நன்மைகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் மாதங்களில் ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போதே அதிக வேலிடிட்டி கொண்ட பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது. மேலும் ஏர்டெல் நிறுவனம் தற்போது சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையைக் கொண்டுவந்துள்ளது. ஆனால் கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனம் 5ஜி சேவையைக் கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








