56 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிகமான சலுகைகளை வழங்கியது.

ஏர்டெல் நிறுவனம்
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் தற்போது சில நகரங்களில் மட்டுமே 5ஜி சேவையை வழங்கியுள்ளது. கூடிய விரைவில் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது பட்ஜெட் விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர Airtel Xstream App அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், Airtel Xstream App அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

5ஜி சேவை..
குறிப்பாக இந்த மூன்று பட்ஜெட் விலை திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். பின்பு ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள 4 நகரங்களில் தனது 5ஜி சேவைகளை (Airtel 5G) அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த நகரங்கள் - கோயம்புத்தூர் (Coimbatore), ஓசூர் (Hosur), திருச்சி (Trichy) மற்றும் மதுரை (Madurai) ஆகும்.

5 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவை
எனவே கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதின் மூலம், தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளானது நாட்டின் 52 நகரங்களில் அணுக கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இப்போது சென்னையையும் சேர்த்து, தமிழகத்தில் உள்ள 5 நகரங்களில் ஏர்டெல்லின் 5ஜி பிளஸ் சேவைகள் அணுக கிடைக்கிறது.

அதிக வேகத்தை வழங்கும்.
ஏர்டெல் தெரிவித்த தகவலின்படி, 5ஜி பிளஸ் நெட்வொர்க் ஆனது தற்போதைய 4ஜி நெட்வொர்க்குகளை விட 20x முதல் 30x அதிக வேகத்தை வழங்கும். கண்டிப்பாக இந்த 5ஜி சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








