சுனில் மிட்டல் அடித்த மெகா சிக்ஸர்.. IPL 2025 க்காக 8 திட்டங்களை இறக்கி உள்ள Airtel நிறுவனம்!
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஓடிடி தளமாக இருந்தாலும் கூட, தனது சேவையின் கீழ் உள்ள ஐபிஎல் 2025 (IPL 2025) கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்ற கூடாது; அவர்கள் ஏர்டெல் சேவையை விட்டு வெளியேறிவிட கூடாது என்பதற்காக, சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது பல பிளான்களில் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை சேர்த்துள்ளது. அதென்ன திட்டங்கள்? இதோ விவரங்கள்:
01. ஏர்டெல் ரூ.195 டேட்டா பிளான் (Airtel Rs 195 Data Plan): ஏர்டெல்லின் ரூ.195 திட்டத்தின் கீழ் 15 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் மற்றும் 90 நாட்கள் அல்லது 3 மாதங்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்.

02. ஏர்டெல் ரூ.100 டேட்டா பிளான் (Airtel Rs 100 Data Plan): ஏர்டெல்லின் ரூ.100 திட்டத்தின் கீழ் 5 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் மற்றும் 90 நாட்கள் அல்லது 3 மாதங்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்.
03. ஏர்டெல் ரூ.3999 பிளான் (Airtel Rs 3999 Plan): ஏர்டெல்லின் ரூ.3999 திட்டத்தின் கீழ் டெய்லி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 1 ஆண்டுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
04. ஏர்டெல் ரூ.1199 பிளான் (Airtel Rs 1199 Plan): ஏர்டெல்லின் ரூ.1199 திட்டத்தின் கீழ் டெய்லி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 84 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
05. ஏர்டெல் ரூ.549 பிளான் (Airtel Rs 549 Plan): ஏர்டெல்லின் ரூ.549 திட்டத்தின் கீழ் டெய்லி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 28 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
06. ஏர்டெல் ரூ.1029 பிளான் (Airtel Rs 1029 Plan): ஏர்டெல்லின் ரூ.1029 திட்டத்தின் கீழ் டெய்லி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 84 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
07. ஏர்டெல் ரூ.398 பிளான் (Airtel Rs 398 Plan): ஏர்டெல்லின் ரூ.398 திட்டத்தின் கீழ் டெய்லி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 28 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
08. ஏர்டெல் ரூ.301 பிளான் (Airtel Rs 301 Plan): ஏர்டெல்லின் ரூ.301 திட்டத்தின் கீழ் டெய்லி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 28 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு முன்பாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ரூ.299 மற்றும் அதற்கு மேலான விலையில் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜியோ அன்லிமிடெட் என்கிற புதிய ஆபரை (Reliance Jio Unlimited Offer) அறிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும் என்று ஜியோ அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








