ஏர்டெல் நிறுவனத்தின் டிஸ்னி + பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டங்கள் இதுதான்: முழு விவரம்.!
சமீபத்தில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ப்ரீபெய்ட் திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனாலும் இந்த திட்டங்கள் இப்போது புதிய விலை நிர்ணயத்துடன் வருகிறது.

டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் நன்மையை வழங்கும் ஏர்டெல் திட்டங்களின் விலை ரூ.599, ரூ.838 மற்றும் ரூ.3359 ஆகும். குறிப்பாக இந்த திட்டங்கள் அனைத்து வெவ்வேறு வேலிடிட்டி மற்றும் வெவ்வேறு நன்மைகளுடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒருவருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் நன்மையை வழங்குகின்றன இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்.

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினிசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுக்கான அணுகல் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினிசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுக்கான அணுகல் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினிசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுக்கான அணுகல் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் என்வென்றால், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன்,Wynk Music, Shaw Academy, FASTag-இல் ரூ.100 கேஷ்பேக் போன்றவைகள் ஆகும். கண்டிப்பாக இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications