பட்ஜெட் விலையில் தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோ, ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதேபோல் இந்நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டது. இன்னும் சில காலங்களில் இந்தியா முழுவதும் இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கும்.
அதேபோல் இந்நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 2.5ஜிபி டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது இந்நிறுவனங்கள் 2.5ஜிபி டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் மொத்த டேட்டா பலன் 75 ஜிபி ஆகும். இந்தத் திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மைகளையும், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது. இது 30 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் ஜியோடிவி,ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.399 திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்று மாதங்களுக்கு அணுகல்இ அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கிறது. இத்திட்டம் தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. மொத்தமாக இந்த திட்டம் 225 ஜிபி டேட்டாவை தருகிறது. இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. அதேபோல் 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அமேசான் பிரைம் வீடியோ சந்தா மற்றும் Airtel Xstream, RewardsMini சந்தா, இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
ஜியோ ரூ.2023 திட்டம்
ஜியோ ரூ.2023 திட்டமானது 252 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மொத்தமாக இந்த திட்டமானது மொத்தம் 630ஜிபி டேட்டா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கூடுதலாக வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பாராட்டு சந்தா என அனைத்து நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவிற்கு ஒரு வருட சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications