Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?
பார்தி ஏர்டெல்லின் 5G ஆதரவு இப்போது இன்னும் வேகமாக இந்தியாவில் உள்ள சாதனங்களில் சேவையை வழங்க துவங்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல், சமீபத்திய முதலீட்டாளர்கள் அழைப்பின் போது, "இந்தியாவில் உள்ள பெரும்பாலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் நவம்பர் நடுப்பகுதியில் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் ஆதரவைப் பெறும்" என்று கூறியிருந்தார்.

பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி ஆதரவை நிறுவனங்கள் வழங்க துவங்கிவிட்டன. ஆனால், எல்லா ஐபோன்களும் அதைப் பெறுவதற்கு இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையின் அனுபவத்தைச் சுவைக்க டிசம்பர் 2022 வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி ஆதரிக்கும் சாம்சங் சாதனங்கள்
இப்போதைக்கு, கடந்த மாதத்தில் மட்டும், சுமார் 16 சாம்சங் சாதனங்கள் ஏர்டெல்லின் 5ஜி நெட்வொர்க்கிற்கான ஆதரவைப் பெற்றுள்ளன. தற்போது, இந்தியாவில் இரண்டு சாம்சங் சாதனங்கள் மட்டுமே இந்த ஆதரவைப் பெறாமல் எஞ்சியுள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. 5G ஆதரிக்கும் அப்டேட்டை சாம்சங் போன்களில் பெரும்பாலான மாடல்கள் பெற்றுவிட்டது.

எந்த சாம்சங் டிவைஸ் இப்போது நிறுவனத்தின் OTA அப்டேட்டை பெற்றுள்ளது? அந்த 2 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த 5ஜி ஆதரிப்பு அப்டேட் கிடைக்கவில்லை என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஏர்டெல்லின் 5ஜியை ஆதரிக்கும் வகையில் சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களுக்கான OTA (ஓவர்-தி-ஏர்) புதுப்பிப்புகளை வெளியிடுவதில் மிக வேகமாக உள்ளது.

இப்போது, பார்தி ஏர்டெல்லின் இணையதளத்தில் உள்ள பட்டியலின்படி, இரண்டு சாதனங்களைத் தவிர, சாம்சங்கின் அனைத்து 5ஜி போன்களும் ஏர்டெல்லின் 5ஜியை இப்போது ஆதரிக்கின்றன. ஏர்டெல் வழங்கும் 5ஜியை ஆதரிக்காத இரண்டு சாதனங்கள் - சாம்சங் கேலக்ஸி Z பிலிப் 3 (Samsung Galaxy Z Flip3) மற்றும் சாம்சங் கேலக்ஸி போல்ட் 3 (Samsung Galaxy Z Fold3) ஆகிய மாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சாதனங்களைத் தவிர, பின்வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஏர்டெல்லின் 5G ஆதரிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த பட்டியலில் - சாம்சங் கேலக்ஸி A33 5ஜி (Samsung Galaxy A33 5G), சாம்சங் கேலக்ஸி A53 5ஜி (Samsung Galaxy A53 5G), சாம்சங் கேலக்ஸி S21 FE (Samsung Galaxy S21 FE), சாம்சங் கேலக்ஸி M 33 (Samsung Galaxy M33), சாம்சங் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா (Samsung Galaxy S22 Ultra),

சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22), சாம்சங் கேலக்ஸி பிலிப் 4 (Samsung Galaxy Flip4) ஆகியவற்றுக்கான புதுப்பிப்புகளைப் பெறத் தொடங்கியுள்ளன. சாம்சங் கேலக்ஸி எஸ் 22+ (Samsung Galaxy S22+) , சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா (Samsung Galaxy Note 20 Ultra), சாம்சங் கேலக்ஸி போல்ட் 4 (Samsung Galaxy Fold4), சாம்சங் கேலக்ஸி எஸ் 21 (Samsung Galaxy S21)

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா (Samsung Galaxy S21 Ultra), சாம்சங் கேலக்ஸி எஸ் 21பிளஸ் (Samsung Galaxy S21 Plus), சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 2 (Samsung Galaxy Z fold 2), சாம்சங் F42 (Samsung E426B (F42)), Samsung M526B (M28BA) ), சாம்சங் A 22 5ஜி (Samsung A22 5G), சாம்சங் எம் 32 5ஜி (Samsung M32 5G), Samsung S20FE 5G, Samsung F23, Samsung A73, Samsung M42, Samsung M53 மற்றும் Samsung M13 போன்ற மாடல்களில் இப்போது ஏர்டெல் 5ஜி கிடைக்கிறது.

அதாவது, மேலே உள்ள அனைத்து சாம்சங் ஸ்மார்ட்போன்களையும் வைத்திருக்கும் இந்தியாவில் உள்ள பயனர்கள் ஏர்டெல்லின் 5G ஐ ஏற்கனவே அறிமுகப்படுத்திய 10 நகரங்களில் பயன்படுத்த முடியும் என்று நிறுவனத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்சங் கூட நவம்பர் இறுதிக்குள், இந்தியாவில் உள்ள அனைத்து 5G திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கும் 5G ஆதரவு புதுப்பிப்பை வெளியிடும் என்று கூறியுள்ளது. எஞ்சியுள்ள 2 மாடல்களும் இந்த மாத இறுதிக்குள் 5ஜி ஆதரவை பெரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications