சைலன்ட் ஆக 5G Data-வை வழங்க தொடங்கிய 5 ஜியோ திட்டங்கள்.. கூட OTT நன்மைகள் வேற!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது - சத்தம் போடாமல் - தனது 5 ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் 5ஜி டேட்டாவை (5G Data) வழங்க தொடங்கி உள்ளது. குறிப்பிட்ட 5 திட்டங்களுமே ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

அதென்ன திட்டங்கள்? அதன் விலை நிர்ணயங்கள் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

புதிய சிம் கார்டுக்கு அவசியம் இல்லை.. ஆனால்?

புதிய சிம் கார்டுக்கு அவசியம் இல்லை.. ஆனால்?

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகளை பெற விரும்புபவர்கள், தங்களிடம் ஏற்கனவே இருக்கும் 4ஜி சிம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம்; அவைகளே 5ஜி இணைப்பை ஆதரிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே ஒரு புதிய 5ஜி சிம் கார்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை; அதற்காக பணம் செலவழிக்க வேண்டிய தேவை இல்லை என்பது நமக்கெல்லாம் ஒரு குட் நியூஸ் தான். ஆனால் 5ஜி டேட்டாவை வழங்கும் ஜியோ திட்டங்களுக்காக நாம் கண்டிப்பாக பணத்தை செலவழித்தே ஆகவேண்டும்!

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

5ஜி டேட்டாவை வழங்கும் 5 ஜியோ திட்டங்கள்!

5ஜி டேட்டாவை வழங்கும் 5 ஜியோ திட்டங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியாவில் அதன் 5ஜி சேவையை வழங்க தொடங்கியுள்ளது மற்றும் பெரிய அளவிலான வெளியீட்டிற்கு முன்னர், இந்த டெலிகாம் நிறுவனம் 4 இந்திய நகரங்களில் (டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில்) அதன் 5ஜி கனெக்ஷனை வழங்குகிறது.

தற்போது மேற்குறிப்பிட்ட 4 நகரங்களில் வசிக்கும் ஜியோ பயனர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோவின் 5 திட்டங்களின் வழியாக 5ஜி டேட்டா ஸ்பீட் அணுக கிடைக்கிறது.

இது ஜியோவின் வெல்கம் ஆபரின் ஒரு பகுதியாகும்!

இது ஜியோவின் வெல்கம் ஆபரின் ஒரு பகுதியாகும்!

நாம் இங்கே பார்க்கப்போகும் 5 ஜியோ திட்டங்களுமே நிறுவனத்தின் போஸ்ட்பெயிட் திட்டங்கள் ஆகும் மற்றும் இது ஜியோவின் வெல்கம் ஆபரின் ஒரு பகுதியாகும்.

அதாவது ஜியோ வெல்கம் ஆபருக்காக இன்வைட் செய்யப்பட்ட (அழைக்கப்பட்ட) வாடிக்கையாளர்களால் மட்டுமே ஜியோ ட்ரூ 5ஜி சேவையின் கீழ் 1 ஜிபிபிஎஸ் வேகத்திலான அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அனுபவிக்க முடியும்.

தீபாவளி முதல் Jio 5G! ஆனால் தானாக கிடைக்காது! MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே கிடைக்கும்!தீபாவளி முதல் Jio 5G! ஆனால் தானாக கிடைக்காது! MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே கிடைக்கும்!

நீங்களும் ஒருவராக இருந்தால்..?

நீங்களும் ஒருவராக இருந்தால்..?

ஜியோ வெல்கம் ஆபரின் கீழ், Jio 5G கனெக்ஷனை பெறும் முதல் அதிர்ஷ்டசாலி பயனர்களில் நீங்கள் ஒருவராக இருந்தால் நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டியது கீழ்வரும் 5 போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத்தான்!

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த 5 திட்டங்களும் 5ஜி டேட்டா ஸ்பீட்-ஐ மட்டுமின்றி சில OTT நன்மைகளையும் வழங்குகின்றன.

ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளான்

ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளான்

5ஜி நெட்வொர்க்கிற்கான தகுதி மற்றும் 1Gbps அதிவேக டேட்டாவுடன் வரும் இந்த ஜியோ திட்டமானது, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற நன்மைகளுடன் சேர்த்து, நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாக்களை வழங்குகிறது.

வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!

ஜியோ ரூ.599 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஜியோ ரூ.599 போஸ்ட்பெய்ட் திட்டம்

இந்த போஸ்ட்பெய்ட் திட்டமானது நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றிற்கான இலவச சந்தாவுடன் சேர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு எக்ஸ்ட்ரா ஜியோ சிம் கார்ட்டையும் வழங்குகிறது.

ஜியோ ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஜியோ ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ், ஜியோ நிறுவனம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களோடு சேர்த்து, நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது.

ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!

ஜியோ ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஜியோ ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்

இதுவொரு பேமிலி பிளான் ஆகும், இதன் கீழ் நீங்கள் 3 ஜியோ சிம்களை பெறுவீர்கள். நன்மைகளை பொறுத்தவரை - அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றிற்கான இலவச சந்தாக்களை பெறுவீர்கள்.

ஜியோ ரூ.1,499 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஜியோ ரூ.1,499 போஸ்ட்பெய்ட் திட்டம்

5ஜி டேட்டா ஸ்பீட்டை வழங்கும் ஜியோ ரீசார்ஜ்கள் என்கிற பட்டியலில் கடைசியாக உள்ள இந்த போஸ்ட்பெய்ட் திட்டமானது - Netflix, Amazon Prime மற்றும் Disney+ Hotstar ஆகியவற்றுக்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.

அதோடு இந்த திட்டத்தின் கீழ் (தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் இன்டர்நேஷனல் கால்கள்), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் இந்திய நெட்வொர்க்குகளுக்கு இடையே ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் அணுக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
List of 5 Jio recharge postpaid plans which offer 5G data speed along with OTT benefits

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X