ஆப்பிள் நிறுவனத்தின் இந்தாண்டு வெளியீடுகள்

By Meganathan
|

கடந்தாண்டு காலாண்டு லாபத்தில் ஆப்பிள் நிறுவனம் 74.6 பில்லியன் டாலர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ஐபோன் 6, மேக் மற்றும் ஆப் ஸ்டோர் செயளிகளை கூறலாம். விற்பனையிலும் இந்நிறுவனம் 74.5 மில்லியன் கருவிகளை விற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த மாதம் வெளியானதில் தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

இந்த விவரங்கள் சந்தை வல்லுன்ரகளை ஆச்சர்யப்படுத்தியிருப்பதோடு இந்நிறுவனம் வெளியிட இருக்கும் கருவிகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு வெளியிட இருக்கும் கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச் கருவிகள் இந்தாண்டு அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் 1.5 முதல் 1.7 இன்ச் வரை ஸ்கிரீன் இருக்கும் என்றும் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் போர்ஸ் டச் என்ற புதிய அம்சம் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

டேப்ளெட்

டேப்ளெட்

12.2 முதல் 12.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் ப்ரோ அல்லது ஐபேட் ப்ளஸ் வால்யூம் பட்டன், லாக் பட்டன் ஆகியவற்றோடு டச் ஐடி கேபாசிட்டிவ் பட்டன் ஆகியவை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐபேட் ஏர் ப்ளஸ்

ஐபேட் ஏர் ப்ளஸ்

மெலிதாக இருக்கும் மற்றொரு ஐபேட் ஏர் டேப்ளெட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 4ஜிபி ராம் மற்றும் ஏ9 சிப் பயன்படுத்தப்படலாம் என்பதோடு இது ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

ஐபேட் மினி 4

ஐபேட் மினி 4

அதிவேக பிராசஸர் , டச் ஐடி மற்றும் சிறந்த கேமரா கொண்ட ஐபேட் மினி 4 இந்தாண்டு வெளியாகலாம்.

ஐபோன் 7

ஐபோன் 7

ஆப்பிள் வழக்கப்படி இந்தாண்டு செப்டம்பரில் புதிய ஐபோன் 7 வெளியாகலாம், இதில் 3டி டிஸ்ப்ளே மற்றும் அதிக கேமரா அம்சங்கள் இருக்கலாம்.

ஐபோன் 6 மினி

ஐபோன் 6 மினி

ஐபோன் 6 எஸ் வடிவமைப்பில் ஐபோன் 6 மினி வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

ஐஓஎஸ் 9

ஐஓஎஸ் 9

ஆப்பிள் நிறுவனம் தனது மென்பொருளை அப்டேட் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் விரைவில் ஐஓஎஸ் 9 வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

ஓஎஸ் எக்ஸ்

ஓஎஸ் எக்ஸ்

ஆப்பிள் நிறுவனம் புதிய வகை ஓஎஸ் எக்ஸ் மென்பொருளை இந்தாண்டு வெளியிடும் என்று கூறப்படுகின்றது.

மேக்புக் ஏர்

மேக்புக் ஏர்

ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ஏர் இந்தாண்டு வெளியாகும் என்றும் இது 12 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஐமேக்

ஐமேக்

ப்ராட்வெல் பிராசஸர் கொண்ட 27 இன்ச் ரெட்டினா ஐமேக் இந்தாண்டின் மத்தியில் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
List of 10 Devices that Apple Launches in 2015. Here you will find List of 10 Devices that Apple Launches in 2015, and its photographs.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X