மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் வீடுகளுக்கே மதுசப்ளை: எங்கு தெரியுமா?

|

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை புரட்டிப் போட்டு விட்டது என்றுதான் கூறவேண்டும். அதுவும் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கு மேல் பதிவாகி வந்தது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். மயானங்கள் நிரம்பி வழிந்தன.

 இரண்டாம் அலையில் தொடக்கத்தில்

குறிப்பாக இரண்டாம் அலையில் தொடக்கத்தில் மாநில அரசுகள் அனைத்தும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த திணறி விட்டனர்.
பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பின்பு மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்புபடிப்படியாக குறைந்து வருகிறது.

மொபைல் ஆப் அல்லது

இந்நிலையில் மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மாதுபானம்
சப்ளை செய்ய டில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக டில்லியில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து, அங்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாமே உங்களுக்காக: எடுத்ததை அப்படியே கொடுத்த ஜியோ- ரூ.98 விலையில் டேட்டா, குரலழைப்பு இன்னும் பல!எல்லாமே உங்களுக்காக: எடுத்ததை அப்படியே கொடுத்த ஜியோ- ரூ.98 விலையில் டேட்டா, குரலழைப்பு இன்னும் பல!

அரசு வெளியிட்ட அறிக்கையின்படி,

மேலும் டில்லி அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, ஆன்லைன் அல்லது மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்பவர்களின் வீடுகளுக்கே சென்று மதுசப்ளை செய்யலாம். ஆனால் விடுதிகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று மதுசப்ளை செய்ய அனுமதி கிடையாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று பூமியைக் கடக்கும் இன்று பூமியைக் கடக்கும் "அபாயகரமான" சிறுகோள்.. லிபர்ட்டி சிலையை விட இரண்டு மடங்கு பெரியதா?

கையில் கூறப்பட்டது

பின்பு அந்த அறிக்கையில் கூறப்பட்டது என்னவென்றால், எல்-13 லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே மது விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். அதுவும் சரியான உரிமங்களை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் மதுபானம் சப்ளை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தாராளமா வாங்கலாம் போல- அதிக பேர் இந்த ஸ்மார்ட்போன்களை தான் தேடிருக்காங்க: அப்போ இதுல என்னமோ இருக்கு!தாராளமா வாங்கலாம் போல- அதிக பேர் இந்த ஸ்மார்ட்போன்களை தான் தேடிருக்காங்க: அப்போ இதுல என்னமோ இருக்கு!

சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப்,

இதேபோல் சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வீடுகளுக்கே சென்று மதுபானம் சப்ளை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறப்பிடத்தக்கது.

எல்லாமே டால்பி ஆதரவு: வீடு தியேட்டர் மாதிரி இருக்கும்- மலிவு விலையில் ரியல்மி 4கே ஸ்மார்ட்டிவிகள்!எல்லாமே டால்பி ஆதரவு: வீடு தியேட்டர் மாதிரி இருக்கும்- மலிவு விலையில் ரியல்மி 4கே ஸ்மார்ட்டிவிகள்!

வைரசின் 2-ம் அலையின் தாக்கம்

மேலும் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கியாதாகக் கூறப்படும் இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. தற்சமயம் இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஏர்டெல் செய்த நம்ப முடியாத காரியம்: ஊழியர்களுக்கு தடுப்பூசி இலவசம்.. பயனர்களுக்கு ரூ.49 பேக் இலவசம்..ஏர்டெல் செய்த நம்ப முடியாத காரியம்: ஊழியர்களுக்கு தடுப்பூசி இலவசம்.. பயனர்களுக்கு ரூ.49 பேக் இலவசம்..

 முதல் அலையின்போது கொ

கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள்,இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய
கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Liquor supply to homes if booked through mobile app or website in Delhi: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X