இனி வீடு வீடுக்கு மதுபானம் டெலிவரி- ஆன்லைன் ஆர்டர்- வேற வழியில்ல கடை பூட்டினால் கண்டதையும் குடிக்கிறாங்க!

|

கோவிட்-19 தொற்று பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்குக்கு மத்தியில் சத்தீஸ்கர் அரசு ஆன்லைன் விற்பனை மூலம் வீட்டிற்கே சென்று மதுபானம் வழங்க அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் வீட்டுக்கு சென்று மதுபானம் வழங்க அனுமதிக்க மாநில வணிக வரித்துறை உத்தரவுப்படி கலால் ஆணையருக்கு அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.

ஊரடங்கை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்

ஊரடங்கை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்

சத்தீஷ்கர் மாநிலத்தில் ஊரடங்கை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மதுபானம் கிடைக்காத காரணத்தால் ஆல்கஹால் கலந்து ஹோமியோபதி சிரப் (Syrup)-ஐ குடித்த ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆன்லைன் மூலம் மதுபானங்கள்

ஆன்லைன் மூலம் மதுபானங்கள்

இதையடுத்து தற்போது தேவைப்படுவோருக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று மதுபானம் வழங்கும் முறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்பட்ட நேரத்தில் மதுபானங்களை ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம் என அந்த மாநில அரசு தெரிவித்திருக்கிறது. பூட்டுதல் காலத்தில் சட்டவிரோத உற்பத்தி, விற்பனை, போக்குவரத்து மற்றும் மதுபானங்கள் வைத்திருப்பதை கட்டுப்படுத்த ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் வீட்டு விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலால் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநில எதிர்கட்சி கடும் எதிர்ப்பு

அந்த மாநில எதிர்கட்சி கடும் எதிர்ப்பு

சத்தீஸ்கர் ஆளூம் கட்சியான காங்கிரஸின் இந்த முடிவுக்கு எதிர்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கோவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் மருத்துவ வசதிகளுக்கு வழங்குவதற்கு பதிலாக மதுபானங்கள் வழங்குவதே மாநில அரசின் முன்னுரிமை என அம்மாநில பாஜக குறிப்பிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் வீட்டுக்கு மதுபானம்

ஆன்லைன் மூலம் வீட்டுக்கு மதுபானம்

ஆன்லைன் மூலம் வீட்டுக்கு மதுபானம் வழங்குவதற்கான நேரம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப நேரங்கள் மாற்ற முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எந்தெந்த கடைகள் வீட்டு விநியோகம்

எந்தெந்த கடைகள் வீட்டு விநியோகம்

சத்தீஸ்கர் ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிஎஸ்எம்சிஎஸ்) எந்தெந்த கடைகள் வீட்டு விநியோக சேவை வழங்கும் என்பதை முடிவு செய்யும் :எனவும் வாடிக்கையாளர்கள் ஆர்டரை வழங்கும்போதே கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் சிஎஸ்எம்சிஎல் வலைதளத்திலோ அல்லது மொபைல் ப்ளேஸ்டோரிலோ கிடைக்கும் எனவும் அதன்மூலமாக ஆர்டர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து லிட்டர் மதுபானங்கள் ஆர்டர்

ஐந்து லிட்டர் மதுபானங்கள் ஆர்டர்

அதேபோல் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் ஐந்து லிட்டர் மதுபானங்களை ஆர்டர் செய்யலாம் எனவும் வீட்டு விநியோக சேவைக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அதேபோல் ஆர்டர் செய்யும்போது கடை 15 கி.மீ-க்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆன்லைன் விற்பனை காரணம்

ஆன்லைன் விற்பனை காரணம்

இதுகுறித்து சத்தீஸ்கர் கலால் துறை அமைச்சர் கவாசிலக்மா கூறுகையில், சட்டவிரோதமாக மதுபான விற்பனை, சானிட்டைசர் மற்றும் ஆல்கஹால் சார்ந்த மருந்துகளை உட்கொண்டு ஏற்பட்ட சம்பவங்களை தொடர்ந்து மதுபானம் வீட்டிற்கு விநியோகம் செய்யும் சேவையை தொடங்க அரசாங்கம் பரிசீலித்ததாக தெரிவித்தார்.

Source: livemint.com

Best Mobiles in India

English summary
Liquor Delivery to Home through Online Orders Amid Covid-19 LockDown

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X