Home
News

35 தங்க iPhone 14 Pro-வை பரிசாக வழங்கிய மெஸ்ஸி.! 1 கோல்டு ஐபோனின் விலை என்ன தெரியுமா?

24 காரட் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட 35 ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) ஸ்மார்ட்போன் மாடலை லியோனல் மெஸ்ஸி தனது கால்பந்தாட்ட வீரர்களுக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். வீரர்கள் மட்டுமின்றி அவருடைய அணியின் ஊழியர்களுக்கும் தங்க ஐபோனை பரிசாக வழங்கியுள்ளார்.

உலகக் கோப்பை வென்ற அணி மற்றும் ஊழியர்களுக்காக 35 தங்க ஐபோன் 14 ப்ரோ (Gold iPhone 14 Pro) ஸ்மார்ட்போன் மாடலை பிரத்தியேகமாக உருவாக்கி, அதை பரிசாக வழங்கியுள்ளார் லியோனல் மெஸ்ஸி. இதற்காக அவர் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் $200,000-க்கும் மேற்பட்ட டாலரை இதற்காக அவர் செலவழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

35 தங்க iPhone 14 Pro-வை பரிசாக வழங்கிய மெஸ்ஸி.! 1 கோல்டு iPhone விலை?

24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட 35 ஸ்பெஷல் iPhone 14 Pro.!

லியோனல் மெஸ்ஸி மீண்டும் தனது சக ஊழியர்களுக்குத் தனது பெருந்தன்மையையும் நன்றியையும் வெளிக்காட்டியுள்ள சம்பவம் இப்போது உலகளவில் பெருமிதமாகப் பேசப்பட்டு வருகிறது. உலக கால்பந்தாட்ட வெற்றி பெற்ற அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 24 காரட் தங்க ஐபோனை அவர்களின் பெயர் மற்றும் அவர்களின் டி-ஷர்ட் ஜெர்சி நம்பர் விபரங்களுடன் பொறிக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம், லியோனல் மெஸ்ஸி, 2022 FIFA உலகக் கோப்பையை வென்ற பிறகு, தனது மற்றும் அவரது அணியினரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன் சாதனத்தைப் பரிசாக வழங்கி, அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளார். இது லியோனல் மெஸ்ஸியின் கால்பந்தாட்ட வாழ்க்கையின் மிக முக்கியமான சாதனை என்பதனால், இத்தகைய செயலை அவர் மகிழ்ச்சியில் செய்துள்ளார்.

35 தங்க iPhone 14 Pro-வை பரிசாக வழங்கிய மெஸ்ஸி.! 1 கோல்டு iPhone விலை?

யார் இந்த கோல்டு iPhone மாடலை டிசைன் செய்து உருவாக்கியது தெரியுமா?

ஒவ்வொரு ஃபோனும் வீரரின் பெயர், ஜெர்சி எண் மற்றும் அர்ஜென்டினா லோகோவுடன் தனித்துவமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பு வகையான பரிசாக அமைந்துள்ளது. இது வரும் ஆண்டுகளில் நிச்சயமாக அர்ஜென்டினா வீரர்கள் மற்றும் குழுவின் ஊழியர்களால் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. லியோனல் மெஸ்ஸி மக்கள் மீது தனது அன்பைக் காட்ட ஒரு போதும் தவறியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் ஐபோன் 14 ப்ரோ மாடலை பரிசாக வழங்குவதற்கு மெஸ்ஸி, ஒரு தனி டிஸைனரை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது. iDesign Gold இன் CEO, தொழிலதிபர் பென் லியோன்ஸைத் தொடர்பு கொண்டு மெஸ்ஸி இந்த தங்க முலாம் பூசப்பட்ட ஸ்பெஷல் ஐபோன் சாதனங்களை வடிவமைக்கச் செய்திருக்கிறார். வெற்றியை நினைவுகூரும் வகையில், வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர்கள் பொறிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்.

35 தங்க iPhone 14 Pro-வை பரிசாக வழங்கிய மெஸ்ஸி.! 1 கோல்டு iPhone விலை?

1 கோல்டு iPhone 14 Pro மாடலின் இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா.!

இந்த ஒரு தங்க ஐபோனின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,70,528 ஆகும். மெஸ்ஸி தனது மிகப்பெரிய சாதனையை நினைவுகூரும் வகையில், தனித்துவம் மிக்க ஒரு பரிசை வழங்க விரும்பி, இந்த ஐபோன்களை ரூ. 1,64,68,500 செலவு செய்து உருவாக்கி இருக்கிறார். முதலில் மெஸ்ஸி வழக்கமான கடிகாரத்தைப் பரிசளிக்க நினைத்ததாகவும், பிறகு அதைவிடச் சிறப்பான மற்றும் செல்ப் டிசைன் செய்யப்பட்ட பரிசாக இருக்க வேண்டும் என்று விரும்பி ஐபோனை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு மட்டுமின்றி, லியோனல் மெஸ்ஸி கடந்த காலங்களில் பல தொண்டு பங்களிப்புகளைச் சைலெண்டாக செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், தனது சக ஊழியர்களின் மருத்துவச் சிகிச்சைக்காகப் பணம் செலுத்தினார் என்பதும் கவனிக்கத்தக்கது. தன்னுடன் இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவுவதை இவர் ஒரு பழக்கமாகவே கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. சமீபத்தில், துருக்கிய பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்கி, மற்றவர்களையும் அவ்வாறு செய்ய வலியுறுத்தினார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lionel Messi Gifted 35 Gold iPhone 14 Pro Models To His FIFA World Cup Winning Team Members
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X