Home
News

1 மாசம் கூட இல்ல.. இப்போ வந்து சொல்றீங்க.. Voter ID-ஐ ஆதார் கார்டு உடன் இணைப்பது கட்டாயமா.. இல்லையா?

2024 ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் தொடங்க முழுதாக ஒரு மாத காலம் கூட இல்லை. இதற்கிடையில் சிலருக்கு, ஆதார் அட்டை உடன் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டுமா என்கிற கேள்வி, சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கான பதில், விளக்கம் இதோ:

ஆதார் அட்டைக்கு முன்பாக இந்திய குடிமக்களுக்கான முக்கிய ஆவணமாக திகழ்ந்தது - வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் வாக்காளர் அடையாள அட்டை தான் ஒவ்வொரு இந்தியரிடமும் இருக்கும் அதிமுக்கியமான ஆவணமாகும்.

Voter ID-ஐ ஆதார் கார்டு உடன் இணைப்பது கட்டாயமா.. இல்லையா?

பான் - ஆதார் இணைப்பை (PAN - Aadhaar Link) போலவே இவ்விரு முக்கிய ஆவணங்களையும் கட்டாயம் இணைக்க வேண்டுமா என்று கேட்டால்.. அப்படி எந்த காட்டாயமும் இல்லை. தேர்தல் ஆணையமானது (Election Commission) வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதை கட்டாயமாக்கவில்லை.

இருந்தாலும் இவ்விரு ஆவணங்களையும் இணைப்பதில் கூட சில நன்மைகள் உள்ளதால், இதை செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறது. அதென்ன நன்மைகள்? என்பதை பற்றி பார்க்கும் முன்னர்.. உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க 3 எளிமையான வழிகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளவும்.

Voter ID-ஐ ஆதார் கார்டு உடன் இணைப்பது கட்டாயமா.. இல்லையா?

ஒன்று - என்விஎஸ்பி (NVSP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் வோட்டர்ஸ் சர்வீஸ் போர்டல் (National Voter's Service Portal) வழியாக இணைக்கலாம். இரண்டாவது - எஸ்எம்எஸ் (SMS) அனுப்புவதன் வழியாக இணைக்கலாம். மூன்றாவது - போன் கால் (Phone Call) செய்வதன் மூலம் இணைக்கலாம்.

நேஷனல் வோட்டர்ஸ் சர்வீஸ் போர்டல் வழியாக.. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைக்க, என்விஎஸ்பி வலைத்தளத்திற்கு சென்று ஃபார்ம்ஸ் (Forms) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே இந்த போரட்டலில் பதிவு செய்திருந்தால், உங்கள் மொபைல் எண், பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு லாக்இன் செய்யவும்.

Voter ID-ஐ ஆதார் கார்டு உடன் இணைப்பது கட்டாயமா.. இல்லையா?

நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால், சைன்அப் (Signup) விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, உங்களுக்கு கிடைக்கும் ஒடிபி-ஐ (OTP) உள்ளிட்டு மற்றும் தேவையான விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்யவும். பதிவு செய்த பின்னர் உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்ட்-ஐ பயன்படுத்தி லாக்-இன் செய்யவும்.

இப்போது ஃபார்ம் 6பி-ஐ கிளிக் செய்யவும். மாநிலம் மற்றும் உங்கள் சட்டமன்றம் / நாடாளுமன்ற தொகுதியைத் தேர்ந்தெடுக்கவும். கோரப்படும் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு, ஒடிபி மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு ப்ரீவியூ (Preview) பட்டனை கிளிக் செய்யவும். கடைசியாக சப்மிட் (Submit) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஒரு ரெஃப்ரென்ஸ் நம்பர் (Reference number) அனுப்பி வைக்கப்படும்; அதைவைத்து உங்கள் கோரிக்கையின் ஸ்டேட்டஸ்-ஐ செக் செய்யலாம்.

எஸ்எம்எஸ் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது எப்படி? உங்கள் வாக்காளர் அடையாள அட்டை உடன் உங்கள் ஆதார் நம்பரை இணைக்க, பின்வரும் வடிவத்தில் 166 அல்லது 51969 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும்: ECILINK

தொலைபேசி அழைப்பின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது எப்படி? வார நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் 1950 என்கிற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் ஒருவர் தங்களது ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முடியும்.

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இப்படி செய்வதன் மூலம் ஒரே பெயரில் பல வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதால் ஏற்படும் சிக்கல்களை குறைக்க முடியும். மேலும் இது போலியான வாக்காளர் அடையாள அட்டைகளை கண்காணிக்கவும், செயலிழக்கவும் உதவி செய்யும்.

மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பிராந்தியங்களில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பதிவையும் கண்டறிய உதவும். எல்லாவற்றை விட மிகவும் முக்கியமாக.. சட்டவிரோத நோக்கங்களுக்காக யாரும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்க முடியாத சூழ்நிலையில் உருவாகும்; மீறி உருவாக்கினால் எளிமையாக சிக்கிக்கொள்ளும் நிலைமை உருவாகும்.

முன்னரே குறிப்பிட்டபடி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமில்லை என்றாலும் கூட, இப்படி செய்வதன் மூலம் ஒவ்வொரு தனிநபரும் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை பாதுகாத்துக்கொள்ள முடியும் மற்றும் தங்கள் பெயரில், தங்கள் புகைப்படத்துடன் போலியான வாக்காளர் அடையாள அட்டைகள் உருவாக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Linking Voter ID with Aadhaar Card Number is Not Mandatory But There are Lot of Benefits By Doing it
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X