LinkedIn: வாழ்க்கையே மாறிடும்.. வேலை தேடுறீங்களா? இந்த ஒரு AI போதும்.. 100% சரியான வேலை வாய்ப்பு உறுதி..
இன்றைய இளைஞர்களை வாட்டி வதைக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது வேலையின்மை. வேலை கேட்டு பல கம்பெனிகளை ஏறி இறங்கியது மாறி, இப்போது ஆன்லைனில் வேலை தேடும் காலகட்டத்திற்கு நாம் வந்து விட்டோம். இதற்காக பிரத்தியேகமாக இயக்கப்படும் தளங்களில் ஒன்று தான் லிங்கிட்இன் (LinkedIn).
முந்தைய காலகட்டத்தில் செய்தித்தாள்களில் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வருவது போல இன்று லிங்கிட்இன் போன்ற இணையதளங்களில் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை அறிவிக்கின்றன. அந்த காலத்தில் கிடைக்காத நன்மை இதில் என்னவென்றால், வேலை தேடுபவர்களும் இந்த தளத்தில் தங்களது தேவையை பதிவிட்டு பயோடேட்டாவை பகிரலாம்.

இதன்மூலம் ஒருவரது தகுதிக்கு பொருத்தமாக இருக்கும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு அவருக்கு சென்று சேரும். உள்ளூர் வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி லிங்கிட்இன் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு கூட வேலையில் சேர முயற்சி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீடியா, மருத்துவம், ஆராய்சி, முழு நேர வேலை, பகுதி நேர வேலை, ஃப்ரீலான்சிங் (Freelancing), வர்க் ஃப்ரம் ஹோம் (Work from home) என்று அனைத்து வகையான தேவைகளுக்கும் இந்த இணையதளத்தில் வேலை தேட முடியும். இத்தனை நன்மைகளை வழங்கி வரும் லிங்கிட்இன், வேலை தேடுதலை சுலபமாக்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை தனது இணையதளத்தில் சேர்த்துள்ளது.
ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) மூலம் செயல்படும் சாட்பாட் (Chatbot) தான் அந்த புதிய அப்டேட். இந்த சாட்பாட்டில் லிங்கிட்இன்னில் பதிவு செய்துள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் தகவல்களும் இருக்கும். இதன்மூலம் வேலை தேடுபவர்களுக்கு சிறப்பாக வழிகாட்ட முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த புதிய அப்டேட்டின் ஐகான் (Icon) ஜாப் லிஸ்டிங் (Job Listing) பகுதியில் ஸ்பார்கில் இமோஜி (Sparkle Emoji) வடிவில் வழங்கியுள்ளது. அதனை கிளிக் செய்தால் சாட் வின்டோ ஒன்று தோன்றும். இதில் உங்களது கேள்விகள், சந்தேகங்கள், நிறுவனத்தை பற்றிய சந்தேகங்கள், எப்படி வேலையை தேர்வு செய்வது என்பதற்கான குறிப்புகள் என்று அனைத்து விதமான கேள்விகளையும் இந்த சாட்பாட்டிடம் கேட்டு பயனடையலாம்.
இந்த ஏஐ சாட்பாட்டிற்கான நோக்கம் மிகவும் எளிமையானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை மற்றும் திறமை இருக்கும். பொதுவான தளத்தை பயன்படுத்தும்போது பல சந்தேகங்கள் எழலாம். எப்படி நிறுவனங்களை அனுகுவது? எப்படி அதற்கு ஏற்றவாறு ப்ரொஃபைலை (Profile) உருவாக்குவது? எப்படி சரியாக விண்ணப்பிப்பது? போன்ற குழப்பங்கள் வரும்.
தனிநபரின் சந்தேகங்களை கையாள்வதற்கு பயனளிக்கும் நோக்கத்தில் தான் இந்த ஏஐ சாட் உருவாக்கப்பட்டுள்ளது. லிங்கிட்இன்னின் தயாரிப்பு மேலாண்மை தலைவர் ரோஹன் ராஜிவ் இதைப்பற்றி கூறுகையில், "இன்றைய சூழ்நிலையில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் கடினமானதாகிவிட்டது. ஒரு வேலைக்கு நாம் பொருத்தமானவரா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு பெரும்பாடு படவேண்டியுள்ளது.
எனக்கு ஏற்ற வாய்ப்புகள் என்னென்ன உள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்வதே கடினமான காரியமாக இருக்கிறது. இதனை தெளிவுபடுத்துவது தான் இந்த ஏஐ சாட்பாட்டின் வேலை" என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன் வந்த ஏஐ சேவைகளான லிங்கிட்இன் ஆட்டோமேடட் ப்ரொஃபைல் சம்மரி (Automated Profile Summary) என்று குறிப்பிடுகிறது.
ஏஐ ஜெனெரேட்டட் ஜாப் டிஸ்க்ரிப்ஷன் (AI generated Job description), பெர்சனலைஸ்ட் கோச்சிங் (Personalised Coaching) அனுபவம் போன்றவற்றுடன் இந்த புதிய அப்டேட்டும் இணைந்துள்ளது. வேலை கிடைப்பதும் கிடைத்த வேலையை தக்க வைப்பதும் பெரும்பாடாக இருக்கும் நிலையில் இந்த அப்டேட் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. வேலை தேடுபவர்களுக்கு இந்த AI 100% சரியான வேலையை பரிந்துரைக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications