Home
News

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இருக்கா? உடனே இதை பண்ணுங்க.. இல்லையென்றால் சிக்கல் தான்..

இந்தியாவில் ஆதார் (Aadhaar) அட்டை வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல, அரசு மற்றும் தனியார் சேவைகளைப் பெறவும் இது அவசியமாக உள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் வங்கி, போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு, மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் ஆதார் இந்த அட்டை தேவைப்படுகிறது. இந்நிலையில் ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் (ration card) கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ரேஷன் கார்டு ஆனது மாநில அரசால் வழங்கப்படுகிறது. ஆனாலும் மத்திய அரசின் உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கிறது. எனவே ரேஷன் கார்டில் நிறைய சலுகைகள் தற்போது கிடைப்பதால் பலர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதேசமயம் சில மோசடி செய்பவர்கள் போலி ரேஷன் கார்டுகள் மூலம் இலவச ரேஷன் வசதியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவேதான் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இருக்கா? உடனே இதை பண்ணுங்க..

குறிப்பாக ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால், ரேஷன் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்க. மேலும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க, மாநில அரசின் அதிகாரப்பூர்வ PDS இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். பின்பு இந்த ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதன் மூலம் எளிதாக ரேஷன் பெற முடியும்.

அதேசமயம் ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை எளிமையாக தடுக்க முடியும். குறிப்பாக மலிவான ரேஷன் உண்மையிலேயே தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். சரி இப்போது ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க வழிமுறைகள்:

1.முதலில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ PDS இணையதளத்தைப் பார்வையிடவும்.
2.அடுத்து உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்.
3.அதன்பின்புஆதார் இணைக்கும் பகுதிக்குச் சென்று, ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு
விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
4.அடுத்து ரேஷன் கார்டு எண், ஆதார் எண் உள்ளிட்ட பிற விவரங்களை உள்ளிட வேண்டும்.
5.குறிப்பாக அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, சரிபார்ப்பிற்காக உங்கள் பதிவு
செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒடிபி ( OTP) வரும்.
6.அதன்பின்பு ஓடிபி நம்பரை உள்ளிடவும், அடுத்து உங்கள் ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன்
இணைப்பது தொடர்பான உறுதிப்படுத்தல் செய்தி உங்கள் மொபைல் போனுக்கு வரும். அவ்வளவுதான்.

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இருக்கா? உடனே இதை பண்ணுங்க..

அதேபோல் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் கார்டையும் ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கான ரேஷன் ஒதுக்கீடு நிறுத்தப்படும். மேலும் ரேஷன் கார்டில் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதில் ஆதார் கார்டு, மொபைல் நம்பர் மட்டுமல்லாமல் கைரேகை சரிபார்ப்பும் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து ரேஷன் வாங்க முடியும். இதை செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு நீக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆதார் அட்டையில் உள்ள தங்களுடைய பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற விவரங்களை தற்போது ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். அதாவது ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள கடைசி தேதி என்று இதற்கு முன்பு டிசம்பர் 14, 2024 ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடைசி வாய்ப்பை UIDAI இறுதி நாளின் போது நீட்டித்து, மற்றொரு வாய்ப்பை இந்திய குடிமக்களுக்கு வழங்கியது. ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்யும் புதிய இறுதி நாள் வாய்ப்பாக ஜூன் 14, 2025 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Link your ration card with Aadhaar card online: otherwise the card may be cancelled: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X