SBI பயனர்களே உஷார்: இந்த தேதிக்குள் இதை செய்யுங்கள்- தவறினால் வங்கி சேவையில் சிக்கல் வரும்!

|

ஆதார் கார்ட்- பான் கார்ட் இணைப்புக்கான கடைசி தேதி 2021 ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி இதுகுறித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. வங்கி சேவைகளில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் விரைவில் ஆதார் மற்றும் பான் கார்ட்களை இணைக்க வேண்டும் என வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.

ஆதார் பான் கார்ட் இணைப்பு

ஆதார் பான் கார்ட் இணைப்பு

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உடனடியாக ஆதார் பான் கார்டை இணைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. தங்களது பாதார் கார்ட் இணைக்கப்பட்டதா என்பதை அறிந்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் இணைப்பதற்கான வழிமுறைகளையும் இங்கே காணலாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

இந்தியாவில் மிகப்பெரிய வங்கி சேவை வழங்குநராக இருப்பது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)., எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களை ஜூன் 30-க்குள் பான் ஆதார் கார்டை இணைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த டுவிட்டரில் எஸ்பிஐ பதிவிட்டுள்ள தகவல் குறித்து பார்க்கையில், இதில் எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்க தடையற்ற வங்கி சேவை தொடர்ந்து அனுபவிக்க தங்கள் வாடிக்கையாளர்களை ஆதார் பான் அட்டையை இணைக்கும்படி அறிவுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை பான் மற்றும் ஆதார் அட்டை

வருமான வரித்துறை பான் மற்றும் ஆதார் அட்டை

வருமான வரித்துறை பான் மற்றும் ஆதார் அட்டை இணைக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது. அப்படி இணைக்கப்படாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதற்கான கால அவகாசம் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு அது நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் 30 கடைசியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் மற்றும் ஆதார் அட்டை இணைப்பு

பான் மற்றும் ஆதார் அட்டை இணைப்பு

பான் மற்றும் ஆதார் அட்டை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இணைக்கப்படாத நபர்கள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உட்பட நேரிடும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இணைக்கப்படாதவர்கள் பான் அட்டை இல்லாதவர்களாகவே கருதப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 272பி கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இணைப்பதற்கான முதல் வழிமுறைகள்

இணைப்பதற்கான முதல் வழிமுறைகள்

உங்களது பான் எண்ணை ஆதார் அட்டையும் உடன் இணைத்து விடடீர்களா? இந்த செயல்முறை முடித்தவர்கள் தப்பித்தார்கள் என்றுதான் கூறவேண்டும். இணைக்கபடாதவர்கள் எப்படி இணைக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

இணைப்பதற்கான முதல் வழிமுறைகள் வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்

வழிமுறைகள்

வழிமுறைகள்

வழிமுறை-1: முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையில் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள் (https://www.incometaxindiaefiling.gov.in)செல்ல வேணடும்.

வழிமுறை-2 அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.
வழிமுறை-3 அதன்பின்பு உங்களிக் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கே பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
வழிமுறை-4 பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்.
வழிமுறை-5 அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-ஐ நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை எஸ்எம்எஸ் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்க வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1 முதலில் ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக கூட நீங்கள் உங்களின் பான்-ஆதார் இணைப்பை நிகழ்த்தலாம்.
வழிமுறை-2 அவ்வாறு செய்யவேண்டும் என்றால், நீங்கள் UIDPAN என்று டைப் செய்து சிறுதி இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் எதாவது ஒன்றிக்கு எஸ்எம்எஸ் செய்தல்வேண்டும். இதன் மூலம் பாண் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Link PAN with Aadhaar to Avoid Inconvenience: SBI Advice to Customers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X