Subscribe to Gizbot

காதலர் தின ஸ்பெஷல்: ஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடேட் பதிப்பு விற்பனைக்கு வருகிறது

Posted By: Jijo Gilbert

ஹூவாயின் இ-பிராண்டான ஹானர், தனது ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஒரு லிமிடேட் பதிப்பின் அறிமுகத்தை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஹானர் 7எக்ஸ் லிமிடேட் பதிப்பு சிவப்பு நிறத்தில் வருகிறது.

காதலர் தின ஸ்பெஷல்: ஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடேட் பதிப்பு விற்பனைக்கு வரு

இது ஒரு லிமிடேட் பதிப்பாக இருப்பதால், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் 20 ஆயிரம் ஹானர் 7எக்ஸ் ரெட் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே விற்பனைக்கு அளிக்கப்படும். இந்த சிறப்பு விற்பனையை காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு முன்னதாக துவங்கும்.

எனினும் இந்நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் முன்னதாகவே வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த லிமிடேட் ரெட் பதிப்பின் விலையைப் பொறுத்த வரை, வழக்கமான ஹானர் 7எக்ஸை விட சற்று அதிகமாக இருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களில் ஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடேட் பதிப்பு ஸ்மார்ட்போன்களை வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு, அதனுடன் சிறப்பு பரிசாக ஒரு சிவப்பு நிறத்திலான ஹானர் மான்ஸ்டர் ஏஎம்15 ஹெட்போன் அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலர் தின ஸ்பெஷல்: ஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடேட் பதிப்பு விற்பனைக்கு வரு

ஹானர் 7எக்ஸில் உள்ள சிறப்பம்சங்களைப் பொறுத்த வரை, ஒரு 5.93 இன்ச் முழு ஹெச்டி+ திரை உடன் ஒரு 18:9 விகிதத்தில் அமைந்து, 1080x2160 பிக்ஸல் பகுப்பாய்வு கொண்ட ஒரு திரையை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் பாதுகாப்பிற்காக, ஒரு 2.5டி கிளாஸ் காணப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் உட்புறத்தை ஆராய்ந்தால், இது 4ஜிபி ராம் உடன் கூடிய ஒரு கிரின் 659 ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 32ஜிபி அல்லது 64ஜிபி உள்ளக நினைவகத்தை பெற்றிருந்தாலும், ஒரு ஹைப்ரிட் சிப் ஸ்லாட்டை பயன்படுத்தி அதை 256ஜிபி என அதிகரித்து கொள்ளலாம்.

ஹானர் 7எக்ஸில் உள்ள கேமராக்களை பொறுத்த வரை, பின்புறத்தில் 16 மெகாபிக்ஸலை கொண்ட ஒரு இரட்டை-கேமரா அமைப்பும் ஒரு 2-மெகாபிக்ஸல் சென்ஸரும் காணப்படுகிறது. முன்புறத்தில் ஒரு 8 மெகாபிக்ஸல் கேமராவைப் பெற்றுள்ளது.

ஜனவரி 11 : புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி.!

ஹானர் 7எக்ஸ் தொடர்ந்து இயங்க, ஒரு 3,340எம்ஏஹெச் பேட்டரி உதவுகிறது. இதன் மென்பொருளைப் பார்த்தால், கஸ்டம் இஎம்யூஐ 5.1 ஸ்கின் உடன் கூடிய ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது. இது 156.50×75.30×7.60 (நீளம் x அகலம் x தடிமன்) அளவிலும், 165.00 கிராம் எடையையும் பெற்றுள்ளது.

ஹூவாய் ஹானர் 7எக்ஸ் ஒரு இரட்டை சிம் (இரண்டும் ஜிஎஸ்எம்) ஸ்மார்ட்போன் என்பதோடு, அவை இரண்டும் நானோ சிம்மை கொண்டு செயல்படுபவை. இணைப்பு தேர்வுகளாக வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், யூஎஸ்பி ஓடிஜி, 3ஜி மற்றும் 4ஜி ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இந்த ஃபோனில் காம்பஸ் மெக்னட்டோமீட்டர், அண்மையில் உள்ளதை அறியும் சென்ஸர் (ப்ரோஸிமிட்டி சென்ஸர்), ஆக்ஸிலிரோமீட்டர், சுற்றுபுற லைட் சென்ஸர் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்ஸர்கள் காணப்படுகின்றன.

ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் நீலம், கருப்பு மற்றும் தங்க நிறத் தேர்வுகளில் கிடைக்கப் பெறுகின்றன. இந்தியாவில் ஹானர் 7எக்ஸ் ஏற்கனவே அதிக பிரபலமாக இருக்கும் நிலையில், மேற்கூறும் சிவப்பு நிறத்திலான லிமிடேட் பதிப்பு இந்திய வாடிக்கையாளர்களின் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about:
English summary
The first 100 customers who purchase the limited edition Honor 7X Red, will receive a Red co-branded Honor-Monster AM15 headphones as a special gift.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot