மொத்தமா மாறுது.. ஜூலை 1 முதல் அமல்.. HDFC, SBI-ஐ தொடர்ந்து CITI, HSBC, YES பேங்க்கின் புது ரூல்ஸ் அறிவிப்பு!
எச்டிஎப்சி பேங்க் மற்றும் எஸ்பிஐ ஆகிய 2 வங்கிகளையும் தொடர்ந்து சிட்டி பேங்க், யெஸ் பேங்க் மற்றும் எச்எஸ்பிசி பேங்க் ஆகிய வங்கிகளும் கூட தத்தம் கிரெடிட் கார்டு பயனர்களுக்கான புதிய விதிகளை மற்றும் மாற்றங்களை அறிவித்துள்ளன. இவைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
சிட்டி பேங்க்: சிட்டி கிரெடிட் கார்டுகள் ஆனது ஜூலை 15 ஆம் தேதிக்குள் ஆக்சிஸ் வங்கிக்கு முழுமையாக மாற்றப்படும். வாடிக்கையாளர்கள் தங்களின் தற்போதைய கார்டு எண், பின், காலாவதி தேதி மற்றும் சிவிவி ஆகியவற்றை தொடர்ந்து தக்க வைத்து கொள்வார்கள்.

பில்லிங் சுழற்சிகள், பணம் செலுத்த வேண்டிய தேதிகள் மற்றும் அறிக்கை உருவாக்கும் தேதிகள் ஆகியவற்றிலும் எந்த மாற்றமும் இருக்காது. அனைத்து தயாரிப்புகளுக்குமான ரிவார்டு புள்ளிகள் ஆக்சிஸ் வங்கி தளங்களில் ஒருங்கிணைக்கப்படும், மேலும் மாற்றத்திற்கு பிறகு வட்டி கட்டணங்கள் ஆக்சிஸ் வங்கியின் விகிதங்களை பின்பற்றும்.
யெஸ் பேங்க்: ஜூலை 1 ஆம் தேதி முதல், யெஸ் வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் இலவச உள்நாட்டு விமான நிலைய ஓய்வறை அணுகலை பெற, ஒரு காலாண்டிற்கு ரூ.35,000 செலவழிக்க வேண்டும். இந்த செலவு வரம்பு ஒரு காலாண்டிற்கு ரூ.10,000 என்பதிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விதி மாற்றம் யெஸ் மார்க்கீ, யெஸ் செலக்ட், யெஸ் ரிசர்வ், யெஸ் ஃபர்ஸ்ட் பிரெஃபர்டு, யெஸ் எலைட் மற்றும் பிற கிரெடிட் கார்டுகளுக்கு பொருந்தும்.
எச்எஸ்பிசி பேங்க்: ஜூலை 1 ஆம் தேதி முதல், அரசு பேமண்ட்கள், காப்பீட்டு பிரீமியங்கள், வாலட் லோடுகள், எரிபொருள் கொள்முதல், வரி செலுத்துதல்கள் மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்கள் ஆகியவற்றிற்கு எச்எஸ்பிசி ரிவார்டு புள்ளிகளை வழங்குவதை நிறுத்தும். அட்டைதாரர்கள் இந்த பிரிவுகளில் அடிக்கடி செலவு செய்தால், குறைவான வெகுமதி புள்ளிகளையே பெற வாய்ப்புள்ளது.
எஸ்பிஐ பேங்க்: எஸ்பிஐ (SBI) என்கிற ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஆனது, தேர்ந்தெடுக்கப்பட்ட போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கான (PhonePe SBI Credit Cards) ரிவார்டு பாயிண்ட் திட்டத்தில் (Reward point programme) மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன
இந்த திருத்தம் போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு பர்பிள் (PURPLE) மற்றும் போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு செலக்ட் பிளாக் (SELECT BLACK) ஆகிய இரண்டு கார்டு வகைகளை வைத்திருப்பவர்களையும் பாதிக்க உள்ளது. ஏனெனில், ரிவார்டு பாயிண்ட்களை பெறுவதற்கான புதிய வரம்புகளும் (New limits), ரிவார்டு பாயிண்ட்களை பெற்று தராத பரிவர்த்தனைகளின் விரிவான பட்டியலும் (List of transactions) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
காப்பீடு, பயன்பாட்டு சேவைகள், கல்வி, நகைகள் வாங்குதல் மற்றும் சுங்க கட்டணம் செலுத்துதல் போன்ற வகைகளுக்கு தங்கள் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்தும் போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு பர்பிள் மற்றும் செலக்ட் பிளாக் கார்டு வைத்திருப்பவர்கள், தாங்கள் பெறும் ரிவார்டு பாயிண்ட்களின் அளவில் மாற்றத்தை காண வாய்ப்புள்ளது.
எச்டிஎப்சி பேங்க்: ஜூலை 1, 2026 முதல், எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு காலண்டர் காலாண்டிற்குள் (calendar quarter) மூன்று முறை உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளை (lounge) இலவசமாக பயன்படுத்திக்கொள்ளத் தகுதி பெறுவார்கள்; ஆனால், அதற்கு முந்தைய காலாண்டில் அவர்கள் குறைந்தபட்சம் ரூ. 60,000 செலவு செய்திருக்க வேண்டும்.
உதாரணமாக, ஜூலை-செப்டம்பர் 2026 காலாண்டில் விமான நிலைய ஓய்வறை (lounge) வசதியை பெற, அட்டைதாரர் ஏப்ரல் மற்றும் ஜூன் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.60,000 அல்லது அதற்கு மேல் செலவு செய்திருக்க வேண்டும். செலவு அடிப்படையிலான இந்த தகுதி விதிமுறை, அதனை தொடர்ந்து வரும் ஒவ்வொரு காலண்டர் காலாண்டிற்கும் பொருந்தும்


Click it and Unblock the Notifications