நம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்! அதிர்ச்சி தகவல்.!

எடுத்துக்காட்டாக, மேப்ஸ் செயலியை நீங்கள் பயன்படுத்தும் போது எந்த இடத்தில் உள்ளீர்கள் என்பதை கூகுள் சேமிக்கிறது.

|

நாம் எங்கெல்லாம் செல்கிறோம் என்பதை அறிந்துகொள்ள கூகுள் மிக ஆர்வமாக உள்ளது. அதனால் தான் நமது அனைத்து நடவடிக்கைகளையும், நாம் வெளிப்படையாக அதை தடுக்காத வரை பதிவு செய்துகொண்டே உள்ளது.

நம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்!  அதிர்ச்சி தகவல்.!

இது தொடர்பான பத்திரிக்கை விசாரணையில், ஆண்ராய்டு மற்றும் ஐபோன் கருவிகளில் உள்ள பெரும்பாலான கூகுள் சேவைகள், நாம் தனியுரிமை அமைப்புகளில் தேவையான மாறுதல் செய்து தகவல்கள் சேமிப்பை தவிர்த்தாலும், லோகேசன் தகவல்களை சேமிக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரின்ஸ்டன்-ல் உள்ள கணிணி அறிவியல் ஆய்வாளர்கள், இதை உறுதிபடுத்தியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில், உங்கள் லோகேசன் தகவல்களை பயன்படுத்த அனுமதி கேட்பதில் கூகுள் முனைப்பாக இருக்கும். கூகுள் மேப்ஸ் போன்ற செயலிகள், அவற்றை பயன்படுத்தும் போது லோகேசனை பயன்படுத்த அனுமதிக்க நினைவூட்டிக்கொண்டே இருக்கும். அதை நீங்கள் அனுமதித்தால், கூகுள் மேப்ஸ் உங்களின் லோகேசனை எந்நேரமும் பதிவு செய்து, உங்களின் அன்றாட நடவடிக்கைகளை "டைம்லைன்" என்ற பெயரில் உங்களுக்கே காண்பிக்கும்.

நிமிடத்திற்கு நிமிடம் பயண தகவல்களை சேமிப்பது தனியுரிமைக்கு பங்கம் விளைவிக்கும் மற்றும் அது போலீஸால் பயன்படுத்தப்பட்டு குற்றம் நடந்த இடத்தை கண்டறியவும் உதவும். கூகுள் நிறுவனம் இந்த வசதியை தற்காலிகமாக நிறுத்தவும் அனுமதிக்கிறது. கூகுள் நிறுவனத்தின் உதவி பக்கம் என்ன கூறுகிறதென்றால், " எந்நேரத்திலும் உங்களுடைய லோகேசன் வரலாற்றை(location history) நிறுத்திக்கொள்ளலாம். அப்படிசெய்யும் பட்சத்தில், உங்களின் தகவல்கள் சேமிக்கப்படாது"என்கிறது.

நம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்!  அதிர்ச்சி தகவல்.!

ஆனால் அது உண்மையல்ல. லோகேசன் வரலாறு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் போதும், சில கூகுள் செயலிகள் உங்களின் அனுமதியின்றியே, லோகேசன் தகலல்களை நேரத்துடன் சேமிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, மேப்ஸ் செயலியை நீங்கள் பயன்படுத்தும் போது எந்த இடத்தில் உள்ளீர்கள் என்பதை கூகுள் சேமிக்கிறது. தானாக செயல்படும் அன்றைய வானிலை தகவல்கள், பின்னர் சில கடைகளை தேடுவது போன்ற ஆண்ராய்டு போன் செயல்பாடுகள், உங்கள் லோகேசனை துல்லியமாக கூகுள் கணக்கில் சேமிக்கிறது.

நம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்!  அதிர்ச்சி தகவல்.!

கூகுளின் ஆண்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் 2 பில்லியன் பயனர்கள் மற்றும் உலகம் முழுக்க கூகுள் மேப்ஸ் மற்றும் தேடல் வசதியை சார்ந்துள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் ஐபோன் பயனர்களின் தனியுரிமையையும் இது பாதிக்கிறது.
Best Mobiles in India

English summary
Like it or not, Google tracks your movements even if you tell it not to: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X