அடுத்த கட்டம் இதுதான்: விரைவில் சாம்சங் போன்களிலும் Satellite இணைப்பு.. ரெடியா?

|

வெளியான தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி தொடர் ஸ்மார்ட்போனில் சாட்டிலைட் இணைப்பை கொண்டுவர இருக்கிறது.

எந்த கேலக்ஸி தொடரில் இந்த அம்சம் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை இருப்பினும் எஸ் தொடரில் இடம்பெறலாம் என தகவல்கள் கூறுகிறது.

சாட்டிலைட் இணைப்பு ஸ்மார்ட்போன்கள்

சாட்டிலைட் இணைப்பு ஸ்மார்ட்போன்கள்

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ் சாட்டிலைட் இணைப்புடன் அறிமுகமானது.

இதையடுத்து சாம்சங் அதன் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் சாட்டிலை இணைப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சாம்சங் ஆப்பிளை பின்பற்றுவது இது முதல்முறையல்ல என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் சாட்டிலைட் இணைப்பு ஆதரவை தங்களது ஸ்மார்ட்போனில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த சாம்சங் போன்களில் இந்த அம்சம்?

எந்த சாம்சங் போன்களில் இந்த அம்சம்?

டிப்ஸ்டர் ரிக்கியோலோ மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த சாம்சங் போன்களில் இந்த அம்சம் இடம்பெறும் என்பது சரியாகத் தெரியவில்லை.

ஐபோன் 14 சீரிஸ் இல் சாட்டிலைட் இணைப்பு என்பது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே தற்போதுவரை கிடைக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் சாட்டிலைட் இணைப்பு ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சாட்டிலைட் இணைப்பு சேவை

சாட்டிலைட் இணைப்பு சேவை

ஆப்பிள் புதிய ஐபோன் 14 சீரிஸ் இல் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இதனுடன் சூப்பர் ப்ரீமியம் ஆப்பிள் வாட்ச்-ம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து சாதனங்களிலும் சாட்டிலைட் இணைப்பு ஆதரவு இருக்கிறது.

செல்லுலார் மற்றும் வைஃபை இணைப்பு இல்லாதபோது அவசரகால சேவைகளுக்கு செயற்கைக்கோள் மூலமாக அவசரகால SOSஐ பயன்படுத்த இந்த சேவை அனுமதிக்கிறது.

விரைவில் சாட்டிலைட் இணைப்பு ஸ்மார்ட்போன்

விரைவில் சாட்டிலைட் இணைப்பு ஸ்மார்ட்போன்

வெளியான கசிவுத் தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் அதன் ப்ரீமியம் கேலக்ஸி எஸ் சீரிஸ் மற்றும் போல்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சத்தை முதல் கட்டமாக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் மட்டும் இந்த சேவை கொண்டுவரப்படுமா இல்லை அனைத்து நாடுகளிலும் கொண்டுவரப்படுமா என்ற தகவல் தெரியவில்லை.

முதல் சாட்டிலைட் ஸ்மார்ட்போன் எது?

முதல் சாட்டிலைட் ஸ்மார்ட்போன் எது?

ஐபோன் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் தான் இந்த அம்சம் இடம்பெறுமா என்றால் அதுதான் இல்லை. அதேபோல் சாட்டிலைட் இணைப்புடன் வெளியான முதல் போன் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் அல்ல.

ஐபோன் 14 சீரிஸ் அறிமுகம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு நிறுவனம் சாட்டிலைட் இணைப்பு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அது ஹூவாய் நிறுவனம் ஆகும்.

Huawei Mate 50 சீரிஸ்

Huawei Mate 50 சீரிஸ்

Huawei நிறுவனம் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனை மேட் 50 சீரிஸ் கீழ் அறிமுகம் செய்தது. ஒரு ஸ்மார்ட்போனை ப்ளாக்ஷிப் என குறிப்பிட என்னென்ன அம்சங்கள் தேவையோ அனைத்தும் இந்த ஸ்மார்ட்போனில் மேலோங்கி இருக்கிறது.

Huawei Mate 50 சீரிஸ் இல் மூன்று மாடல்கள் வெளியானது. பெரிஸ்கோப் டெலிபோட்டோ மேக்ரோ கேமரா இதில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அது சாட்டிலைட் இணைப்பு தான்.

முதல் பிரபல ஸ்மார்ட்போன் இதுதான்

முதல் பிரபல ஸ்மார்ட்போன் இதுதான்

Beidou Satellite Message 3 நெறிமுறை என அழைக்கப்படும் செயற்கைக்கோள் இணைப்பு இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.

செல்லுலார் இணைப்பு இல்லாமலேயே நீங்கள் ஒரு மெசேஜையும் இருப்பிடத்தை பகிர முடியும். செயற்கைக்கோள் ஆதரவை வழங்கும் உலகின் முதல் பிரபல ஸ்மார்ட்போன் இதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவழி தகவல்தொடர்புகள்

இருவழி தகவல்தொடர்புகள்

தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் இல் சாட்டிலைட் இணைப்பு இடம்பெற்றது. செயற்கைக்கோள் அம்சத்திற்கு என புதிய தனிப்பயன் வன்பொருள் மற்றும் பெஸ்போக் மென்பொருளை ஆப்பிள் வடிவமைத்துள்ளது.

இதன்மூலம் பெரிய ஆண்டெனாக்கள் எதுவும் இல்லாமல், செயற்கைக்கோளை அணுக முடியும். இது இருவழி தகவல்தொடர்புகளை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Like Apple, Samsung is also set to launch a satellite-connectivity smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X