எல்ஜி V30 மாடலின் ரிலீஸ் தேதி குறித்து கசிந்த தகவல்

Written By:

ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை கொண்டுள்ள எல்ஜி நிறுவனத்தின் புதிய மாடலான எல்ஜி V30 மாடல் விரைவில் வெளிவரும் என்று கடந்த சில வாரங்களாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த மாடலின் ரிலீஸ் தேதி குறித்த வதந்தி வெகுவேகமாக பரவி வருகிறது.

எல்ஜி V30 மாடலின் ரிலீஸ் தேதி குறித்து கசிந்த தகவல்

இதுகுறித்த தகவல்களும் வீடியோக்களும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த மாடலின் அறிமுக தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல நிறுவனம் ஒன்று எல்ஜி V30 மாடல் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தனது டுவிட்டரில் செய்தியை கசிய விட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த மாடலின் அறிமுக விழா அழைப்பிதழையும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அழைப்பிதழ் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எல்ஜி V30 மாடல் இன்னும் ஒன்றரை மாதங்களில் நமது கையில் தவழும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த அழைப்பிதழின் உண்மைத்தன்மை குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை

இந்த அழைப்பிதழில் எல்ஜி V30 மாடல் போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டு அதில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வியாழக்கிழமை என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர எல்ஜி V30 மாடலின் பெயரை குறிப்பிடவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் தென் கொரிய ஊடகம் ஒன்று எல்ஜியின் புதிய மாடலின் பணிகள் முடிவடைந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த செய்தியையும், இந்த அழைப்பிதழையும் வைத்து பார்க்கும்போது ஆகஸ்ட் 31ல் எல்ஜி V30 மாடல் வெளியிட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி எல்ஜிV20 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் வெளியாகி ஒருவருடம் கூட நிறைவு பெறாத நிலையில் இன்னொரு புதிய மாடலை வெளியிடுவது ஏன்? என்பது அனைவருக்கும் புரியாத புதிராக உள்லது. ஒருவேளை வரும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 8 மாடலுக்கு போட்டியாக இந்த புதிய மாடலை வெளியிட திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது

இருப்பினும் எல்ஜி நிறுவனம் அதிகாரபூர்வமாக எல்ஜி V30 மாடலின் அறிமுக தேதியை அறிவிக்கும் வரை பொறுமை காப்போம்Read more about:
English summary
The launch invitation hints that the LG V30 will get launched on August 31 in Berlin, Germany.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot