டூயல் கேமரா & கைரேகை சென்சார் உடன் வெளிவரும் எல்ஜி வி30.!
குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒசி செயலி மற்றும் ஐபிஎஸ்68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறமைக் கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.!
எதிர்பார்த்தபடி எல்ஜி நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அட்டகாசமான கைரேகை சென்சார் மற்றும் டூயல் கேமரா அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பு பொருத்தவரை மிகவும் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொருத்தவரை ரூ.45,200 வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது, மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 835:
குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒசி செயலி மற்றும் ஐபிஎஸ்68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறமைக் கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது. அதன்பின் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

6-இன்ச் டிஸ்பிளே:
எல்ஜி வி30 பொருத்தவரை 6-இன்ச் டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது. மேலும் 1080 வீடியோ பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.அதன்பின் இதன் வடிவமைப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

டூயல் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் பின்புற டூயல் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் எல்ஜி லோகோ சிறப்பாக அமைந்துள்ளது.

128ஜிபி மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 128ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பேட்டரி:
எல்ஜி வி30 பொருத்தவரை 3200எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் குறிப்பிட்ட வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications