4 அடி உயரத்தில் இருந்து தவறினாலும் தாக்குப்பிடிக்கும் எல்ஜி வி20.!
எல்ஜி வரும் திங்களன்று இந்தியாவில் அதன் வி20 ஸ்மார்ட்போன் வெளியீட்டு விழாவிற்கான ஊடக அழைப்புகளை அனுப்பு தொடங்கியுள்ளது.
வரும் திங்களன்று இந்தியாவில் வெளியாகும் எல்ஜி வி20 கருவியானது இந்த வார தொடக்கத்தில் இருந்து ஆப்லைன் விற்பனையாளர்கள் வழியாக ரூ.54.999/- மற்றும் ரூ. 60,000/- என்ற சிறப்பான விலைக்கு கிடைக்கும்.
மேலும் சில்லறை விற்பனையாளர்கள் எல்ஜி வி20 கருவியை ஆரம்பத்தி;லேயே வாங்குவோர்களுக்கு பேங் & ஓலுஃப்சன் ஹெட்செட் இணைப்பாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் மற்றும் ஸ்மார்ட்போனிற்கு பைபேக் திட்டங்க்ளுடன் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎல்6013 உலோகம்
இக்கருவியின் டுவல் டிஸ்ப்ளே மற்றும் இரட்டை பின்புற கேமரா அமைப்பு தவிர்த்து மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் உடல் ஏஎல்6013 உலோகம் மூலம் வெளிப்புறம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பி & ஓ ப்ளே ஸ்பீக்கர்கள்
நான்கு அடி உயரத்தில் இருந்து கருவி தவறி கீழே விழுந்தாலும் கருவிக்கு சேதம் ஏற்படாதது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. உடன் இக்கருவி 32-பிட் ஹை-ஃபை குவாட் டிஎசிஎம் எச்டி ஆடியோ ரெக்கார்டர் மற்றும் பி & ஓ ப்ளே ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்
மேலும் நினைவுகூர வேண்டுமென்றால் எல்ஜி வி20 கருவி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது, மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு (பெட்டிக்கு வெளியே) ஏற்றுமதி செய்யப்படும் முதல் பெட்டியில் முதல் தொலைபேசியாகவும் இது திகழ்ந்தது. இக்கருவியானது எல்ஜி வி10-ஐ ஒத்த ஒரு கட்டமைப்பு கொண்டுள்ளது. அதாவது ஒரு 5.7-அங்குல க்யூஎச்டி (1440x2560 பிக்சல்கள்) ஐபிஎஸ் குவாண்டம் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு
மேலும் 4ஜிபி ரேம் கொண்ட இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. டுவல் டிஸ்ப்ளே தவிர்த்து ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது.

கேமிரா
அதில் ஒரு 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமிரா ஒரு 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. முன்பக்க கேமிரா 5 மெகாபிக்சல் கொடுள்ளது. மெமரியை பொருத்தவரை 32ஜிபி அல்லது உள்ளடங்கிய சேமிப்பு 64ஜிபிவி (256ஜிபி வரை) மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக நீட்டிக்கும் வண்ணம் இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இணைப்பு ஆதரவு
எல்ஜி வி20 கருவியின் இணைப்பு விருப்பங்களை பொருத்தவரை 4ஜி,எல்டிஇ (இந்திய எல்டிஇ பட்டைகள்), வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், என்எப்சி, இன்ப்ராரெட்மற்றும் யூஎஸ்பி ஓடிஜி ஆகியவைகளை ஆதரிக்கிறது. மேலும் 3200எம்ஏஎச் திறன் கொண்ட நீக்கக்கூடிய பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவிடும் போது 159.70x78.10x7.60 மற்றும் 174 கிராம் எடையுடையது.

மேலும் படிக்க
10,900 எம்ஏஎச் - 'மரண அடி அடித்தாலும்' பேட்டரி மட்டும் காலியே ஆகாது.!


Click it and Unblock the Notifications