இது ஸ்மார்ட் டிவியா? இல்லை மினி தியேட்டரா? இப்படி கெத்தா செதுக்கி இருக்கீங்க.! LG-ன் புது 4K டிவி!
எல்ஜி (LG) நிறுவனம், தற்போது அதன் ஸ்மார்ட் டிவி சீரிஸ் வரிசையில் புதிதாக UR7500 என்ற சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மிரட்டலான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி மிட் ரேஞ் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எல்ஜி நிறுவனம் தற்போது இந்த UR7500 சீரிஸ் வரிசையில், புதிதாக 43' இன்ச், 50' இன்ச், 55' இன்ச் மற்றும் 65' இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் WebOS மூலம் இயக்கப்படுகிறது. இது ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் α5 (AI) சிப்செட் உடன் வருகிறது. இது 4கே ஜென் 6 (4K Gen6) சிப் பொருத்தப்பட்டுள்ளது.

இது மிகவும் தெளிவான மற்றும் துல்லியமான வீடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த டிவிகள் AI பிரைட்னஸ் மற்றும் 4K ஹை-ரெஸ் தொழில்நுட்பத்துடன் வருகிறது. LG UR7500 Smart Tv சீரிஸ் HDR10 Pro அம்சத்தை ஆதரிக்கிறது. மேம்படுத்தப்பட்ட HDR, கான்ட்ராஸ்ட் அண்ட் டீடைல் டைனமிக் டோன் மேப்பிங் அம்சத்தை இந்த டிவிகள் கொண்டுள்ளது.
ஆப்பிள் ஏர்ப்ளே மற்றும் ஹோம்கிட் ஒருங்கிணைப்பு மூலம், பயனர்கள் தங்கள் ஆப்பிள் சாதனங்களை டிவியுடன் வசதியான ஸ்ட்ரீமிங்கிற்கு தடையின்றி இணைக்க முடியும். இந்த எல்ஜி ஸ்மார்ட்டிவிகள் HDR கேமிங் அனுபவத்திற்கு HGiG அம்சத்தை ஆதரிக்கின்றன. இத்துடன் சினிமா தியேட்டர் போன்ற அனுபவத்தை ஃபிலிம்மேக்கர் மோட் உடன் வருகிறது.
உயர் தர ஆடியோ அனுபவத்தை வழங்க இது AI சவுண்ட் அம்சத்துடன் வருகிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஆப்பிள் டிவி (Apple TV), சோனி லைவ் (Sony LIV), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), ஜீ5 (Zee5), வூட் (Voot),

கூகுள் பிளே மூவிஸ் அண்ட் டிவி (Google Play Movies and TV), யப் டிவி (YuppTV), யூடியூப் (YouTube), ஈரோஸ் நவ் (Eros Now) போன்ற மிகவும் பிரபலமான OTT ஆப்ஸ்களுக்கான அணுகலுடன் ஸ்மார்ட் WebOS இயங்குதளம் போன்ற அம்சங்களையும் இந்த ஸ்மார்ட் டிவிகள் கொண்டுள்ளது. இந்த டிவி HDMI x 3; USB x 2, ஈதர்நெட், RF இன்புட், புளூடூத் மற்றும் வைஃபை அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த எல்ஜி UR7500 சீரிஸ் வரிசையில் உள்ள 43' இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.32,490 ஆகும். அதேபோல், இதன் 50' இன்ச் மாடல் டிவியின் விலை ரூ. 43,990 ஆகும். இதன் 55″ மாடலின் விலை ரூ. 47,990 மட்டுமே. இறுதியாக 65″ மாடலின் விலை ரூ. 69,990 ஆகும்.
இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி மாடல்கள் இப்போது LG இணையதளத்தில் கிடைக்கின்றன. இதுதவிர, இவை Flipkart இலிருந்து 43″ மற்றும் 55″ மாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இன்ச் மாடல்களை வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் நேரடி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








