Home
News

இது ஜவ்வு மிட்டாய் இல்லை.. புது அல்டிமேட் டிஸ்பிளே.. இழுக்க இழுக்க வந்துட்டே இருக்கு.. எத்தனை இன்ச் தெரியுமா?

உலகத்தின் மூலம் ட்ரூலி ஸ்ட்ரெச்சபிள் டிஸ்பிளேவை (world's first truly stretchable display) தென் கொரிய நிறுவனமான எல்ஜி (LG) இன்று அறிமுகம் செய்துள்ளது. இதுவரை பிலிப் டிஸ்பிளே (Flip display), போல்டப்பில் டிஸ்பிளே (Foldable display), அண்டர் கேமரா டிஸ்பிளே (under camera display) என்று பல வித்தியாசமான டிஸ்பிளேவை பார்த்து வந்த நமக்கு இது மிகவும் புதிதான ஒரு டிஸ்பிளேவாக அமைந்துள்ளது. காரணம், இது ஜவ்வு மிட்டாய் போல இழுக்க-இழுக்க நொடிக்கு நொடி நீண்டுகொண்டே செல்கிறது. இந்த புதிய டிஸ்பிளேவை நாம் எந்தெந்த சாதனங்களில் எதிர்பார்க்கலாம் என்று பார்க்கலாம்.

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்ஜி நிறுவனம், இழுக்க-இழுக்க 50% வரை விரிவடையும் உலகத்தின் முதல் ஸ்ட்ரெச்சபிள் டிஸ்பிளேவை உருவாக்கியுள்ளது. இந்த புதிய டிஸ்பிளேவை எல்ஜி நிறுவனம் இன்று உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. பார்ப்பவர்கள் வியப்படையும் வகையில், இந்த டிஸ்பிளேவை நிறுவனம் இழுத்து அதன் அளவை அதிகமாக்கி டெமோ செய்து காண்பித்துள்ளது.

இது ஜவ்வு மிட்டாய் இல்லை.. புது அல்டிமேட் டிஸ்பிளே.. இழுக்க இழுக்க..

எல்ஜி நிறுவனம் இத்தகைய ஸ்ட்ரெச்சபிள் டிஸ்பிளேவை உருவாக்குவது இது முதல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், கடந்த 2022 ஆம் ஆண்டில் அதன் முதல் ஸ்ட்ரெச்சபிள் டிஸ்பிளே தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இதுவொரு ப்ரோட்டோடைப் மாடல் என்பதனால் இதன் இழுவை பண்பு வெறும் 12% வரை மட்டுமே சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்போது எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்ட்ரெச்சபிள் டிஸ்பிளே 50% வரை இழுக்க கூடிய இழுவை பண்புடன் வருகிறது. இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்த டிஸ்பிளேவை 12" இன்ச் இல் இருந்து 18" இன்ச் அளவு வரை நம்மால் இழுத்து பெரிதாக்கி பயன்படுத்த முடியும்.

இந்த 12" முதல் 18" இன்ச் அளவிற்குள் ஸ்ட்ரெச்சபிள் டிஸ்பிளே எந்தவித குவாலிட்டி லாஸ் இல்லாமல், மிகவும் துல்லியமான வீடியோ அனுபவத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு மேலும் இந்த டிஸ்பிளேவை இழுத்து பயன்படுத்த முடியும் என்கிறது எல்ஜி நிறுவனம், ஆனால், குவாலிட்டி லாஸ் எதுவும் இல்லாமல், மிகவும் சிறந்த வீடியோ அனுபவத்தை கிரிஸ்டல் கிளியர் வீடியோவுடன் பார்க்க 12" முதல் 18" இன்ச் அளவு சிறந்த அளவாக இருக்கிறதென்று LG தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஸ்ட்ரெச்சபிள் டிஸ்பிளேவை எல்ஜி நிறுவனம் அல்டிமேட் டிஸ்பிளே டெக்னாலஜி (Ultimate display technology) என்று குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிஸ்பிளேவை 18" இன்ச் வரை இழுத்து பயன்படுத்தும் பொழுதும், இந்த டிஸ்பிளே 100 பிக்சல் பெர் இன்ச் என்ற உயர் திறனுடன் சிறப்பாக செயல்படுகிறது. இது முழுமையாக RGB நிறத்துடன் செயல்படுகிறது.

இந்த ஸ்ட்ரெச்சபிள் டிஸ்பிளேவை எல்ஜி நிறுவனம் பல இடங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த டிஸ்பிளேவை இழுத்து பயன்படுத்த முடியும் என்பதனால், முழு டிஸ்பிளே போனை உருவாக்குவது இனி எளிமையானது. போனின் பேக் பேனல்களில் கூட இனி டிஸ்பிளே வைத்தால், பயனர் விருப்பத்திற்கு ஏற்ற நிறங்களை அவர்கள் தேர்வு செய்துகொள்ள முடியும்.

வாகனம், வளைந்த விளம்பர பலகைகள், மற்றும் ஆடை அலங்காரங்களில் கூட இந்த ஸ்ட்ரெச்சபிள் டிஸ்பிளேவின் பயன்பாட்டை நாம் எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம் என்று LG நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
LG Ultimate display technology is World’s first truly stretchable display can expand from 12 to 18 inches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X