Home
News

செட்-டாப் பாக்ஸ், DTH-ஐ முடித்த LG.. காசே இல்லாமல், 170+ லைவ் டிவி சேனல்கள்.. வாரி கொடுத்த LG சேனல்ஸ் சேவை!

எல்ஜி இந்தியா (LG India) நிறுவனமானது ஃபாஸ்ட் (FAST) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரீ ஆட்-சப்போர்டெட் ஸ்ட்ரீமிங் டெலிவிஷன் (Free Ad-supported Streaming Television) சேவையை இந்தியாவில் கொண்டுவந்துள்ளது. எல்ஜி சேனல்கள் (LG Channels) என்று அழைக்கப்படும் சேவையின் வழியாக 170 லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.

இந்தியாவின் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் அதிவேக ஹோம் பிராட்பேண்ட் (Home Broadband) சேவைகள் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதில் லைவ் டிவி சேனல்களும் கிடைக்கின்றன. இருப்பினும், இதற்கு மாதராந்திர சந்தா இருக்கிறது. ஆனால், எந்தவொரு மாதாந்திர சந்தாவும் இன்றி லைவ் டிவி சேனல்களை பார்க்கும் ஆர்வத்தை இது தூண்டி இருக்கிறது.

செட்-டாப் பாக்ஸ், DTH-ஐ முடித்த LG.. காசே இல்லாமல், 170+ லைவ் டிவி!

எல்ஜி டிவிகளில் வெப்ஓஎஸ் (webOS) கொண்டுள்ள மாடல்களில் ஹார்டுவேர் (Hardware) அப்கிரேட் அல்லது எந்தவொரு கட்டணம் இல்லாமல் இந்த லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இந்த எல்ஜி சேனல்ஸ் சேவையில் எண்டர்டெயின்மெண்ட், 24 மணி நேர நியூஸ், மூவிக்கள், லைஃப்ஸ்டைல் (Lifestyle), கிட்ஸ் ஷோக்கள், ஆன்மீக கன்டென்ட் உள்ளிட்டவை உள்ளன.

மேலும், ஸ்போர்ட்ஸ் ஹைலைட்ஸ் (Sports Highlights) மற்றும் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் லைவ் டிவி சேனல்ககள் ஸ்ட்ரீமிங் (Streaming) செய்யப்படுகின்றன. எல்ஜி டிவி கஸ்டமர்கள் தங்களது டிவியின் ஹோம் ஸ்கிரீன் (Home Screen) வழியாகவே நேரடியாக இந்த லைவ் ஸ்ட்ரீம் (Live Stream) சேனல்களை எளிதாக பார்த்து கொள்ள முடியும்.

இந்திய கஸ்டமர்களை கவரும் வகையில் இந்தி சினிமா மற்றும் பாலிவுட் மூவிக்களின் மிகப்பெரிய பண்டிலையும் எல்ஜி நிறுவனம் இதில் கொடுக்கிறது. மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் (Subscription) கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல், ஆன்-டிமாண்ட் (On-Demand) முறையிலோ அல்லது லீனியர் (Linear) ஸ்ட்ரீமிங் முறையிலோ கன்டென்ட்களை பார்க்க விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கிறது.

செட்-டாப் பாக்ஸ், DTH-ஐ முடித்த LG.. காசே இல்லாமல், 170+ லைவ் டிவி!

பாலிவுட் மூவிக்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மொழி பார்வையாளர்களுக்காக பிராந்திய மொழி கன்டென்ட்களும் இதில் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிடைக்கும் பிரத்யேக சேனல்கள் இந்த எல்ஜி சேனல்களில் இணைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு சேனல்கள் மட்டுமல்லாமல், சர்வதேச பிராட்காஸ்டர்களுடன் (Broadcasters) இணைந்து அந்த கன்டென்ட்களையும் பெறும்படி எல்ஜி நிறுவனம், இந்த சேவையை கொடுக்கிறது. டிஜிட்டல் ஆட் இன்சர்ஷன் (Digital Ad Insertion) அடிப்படையில் இந்த சேவை இலவசமாக வழப்கப்படுகிறது. ஆகவே, ஆட்கள் இருக்கும். இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், இது சப்ஸ்கிரிப்ஷன் வீடியோ ஆன் டிமாண்ட் (SVOD) பிளாட்பார்ம்களில் இருக்கும் கட்டண சந்தாவுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது. அதேநேரம், விளம்பரதாரர்களுக்கும் இது எளிதாக இந்திய வீடுகளை சென்றுசேர வழிவகை செய்துள்ளது. இதே போல சாம்சங் நிறுவனமும், அதனுடைய டிவிகளில் இலவச லைவ் டிவி சேனல்களை கொடுக்கின்றன.

இதுபோன்ற ஸ்மார்ட் டிவிகளிலேயே கிடைக்கும் லைவ் சேனல்களுக்கு செட்-டாப் பாக்ஸ் அல்லது கேபிள் டிவி போன்ற எந்தவொரு கனெக்சனும் தேவையில்லை. டிவியில் பிராட்பேண்ட் வழியாகவோ அல்லது வை-பை வழியாகவே இன்டர்நெட் இருந்தால் போதும், லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ள முடியும். இந்தியாவில் இது மிகவும் வரவேற்பு பெற்ற சேவையாகும்.

Best Mobiles in India

English summary
LG Smart TVs Now Offer Over 170 Free Channels in India Via LG Channels Without Set-top Box
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X