8 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு நௌக்கட் ஒஎஸ்: அசத்தும் எல்ஜி டேப்லெட் அறிமுகம்

|

எல்ஜி நிறுவனம் சத்தமில்லாமல் புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி ஜி பேட் X2 8.0 பிளஸ் என அழைக்கப்படும் புதிய டேப்லெட் விலை 240 டாலர்கள் அதாவது ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு நௌக்கட் கொண்ட எல்ஜி டேப்லெட்

எல்ஜி ஜி பேட் X2 8.0 பிளஸ் புதிய பிளஸ் பேக் கொண்டுள்ளது. சிறிய பெட்டியாக இருக்கும் இது சாதனத்தின் பின்புறம் காந்த சக்தி கொண்ட போகோ பின் மூலம் இணைக்கப்படுகிறது. இந்த பெட்டிகள் சாதனத்தின் பேட்டரி திறனை 6300 எம்ஏஎச் ஆக அதிகரிக்கிறது.

இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் யுஎஸ்பி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கழற்றக் கூடிய ஸ்டான்டு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 8.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1920*1200 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள சிப்செட் பெயரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மாத தவணை வசதியில் வாங்கக் கூடிய தலைசிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்மாத தவணை வசதியில் வாங்கக் கூடிய தலைசிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

புதிய எல்ஜி ஜி பேட் X2 8.0 பிளஸ் டேப்லெட்டில் ரேம் சார்ந்த தகவல்கள் அறியப்படாத நிலையில், இதில் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க முன்பக்கம் மற்றும் பின்புறம் 5 எம்பி எச்டிஆர் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரைமரி கேமரா 4X டிஜிட்டல் சூம் வசகி கொண்டுள்ளது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் 2900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 4.2 போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
The upcoming LG tablet sports an 8-inch Full HD display with a screen resolution of 1920×1200 pixels.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X