கடைசியில் எல்ஜி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? என்ன காரணம்?
எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் சிறந்த நிறுவனமாக உள்ளது எல்ஜி நறுவனம். இந்நிலையில் எல்ஜி நிறுவனம் சார்பில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது,
அது என்னவென்றால், ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

எல்ஜி நிறுவனம்
கடந்த சில வாரங்களாக எல்ஜி நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் தயாரிப்பை நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்சமயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, கம்பெனியின் போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் திங்கள் கிழமை இதற்கான ஒப்புதலை அளித்தாக எல்ஜி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம் ஸ்மார்ட்போன் வணிகத்தால் சந்தித்த தொடர் நஷ்டம்தான் என்று கூறப்படுகிறது.

அதாவது இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், கடந்த 2015-ம் ஆண்டு முதலே இந்நிறுவனத்தின் போன் டிவிசனில் கடும் இழப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்பு கடந்த ஆண்டு சுமார் 751 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஸ்மார்ட்போன் பிரிவில் எல்ஜி நிறுவனம் இழப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேஸ்புக், கூகுள், வோல்க்வோகன் போன்ற பல்வேறு நிறுவனங்கள் எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவை வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனாலும் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடு எட்டப்படவில்லை. எனவேதான் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து முழுவதுமாக வெளிவருகிறது எல்ஜி நிறுவனம்.

இருந்தபோதிலும் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களும் முழுவதுமாக விற்பனைக்கு வரும் எனவும், சர்வீஸ் மற்றும் மென்பொருள் அப்டேட் ஆகியவையும் பிராந்தையத்தை பொருத்து சில காலம் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிறுவனம் ரோலபிள் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டது, ஆனால் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, அடுத்த ஆண்டு ஜுலை 31-ம் தேதி எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வணிகம் முற்றிலும் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications