சென்னையில் இலவச சர்வீஸ் செய்து தரப்படும், எல்ஜி அறிவிப்பு.!!
சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பக்க பலமாக இருக்கும் வகையில் எல்ஜி நிறுவனம் இலவச சர்வீஸ் முகாம் ஒன்றை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதன் படி எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் சார்பில் இலவச சர்வீஸ் முகாம் உடனடியாக துவங்குகின்றது. எல்ஜி பொருட்களுக்கு சரீவீஸ் செய்ய கட்டணம் வசூலிக்க போவதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பொருளில் ஏதேனும் உபகரணம் மாற்றம் செய்யும் படி இருந்தால் புதிய உபகரணத்திற்கு 50 சதவிகித தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதாக அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் விரைவில் மீண்டு எழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த இலவச சர்வீஸ் முகாம் நடத்தப்படுவதாக எல்ஜி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை தலைமை அதிகாரி வினோத் குமார் தெரிவித்தார்.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications