என்னதான் ஆச்சு., விடைபெறும் எல்ஜி- மொபைல் பிஸ்னஸ்க்கு குட்பை- எல்ஜிக்கே இந்த நிலைமையா?

|

ஸ்மார்ட்போன் துறையில் பல்வேறு புதுவகை மாடல்களை புதுப்புது தோற்றத்தோடு அறிமுகம் செய்த எல்ஜி நிறுவனம் தனது மொபைல் பிஸ்னஸை இழுத்து மூடியது. எல்ஜி நிறுவனம் உலகளவிலான ஸ்மார்ட்போன் பிஸ்னஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த முடிவின் மூலம் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்சார வாகன கூறுகள், ஸ்மார்ட் வீடுகள் ஆகியவற்றின் வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற எல்ஜி நிறுவனத்துக்கு உதவியாக இருக்கும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எல்ஜி ஸ்மார்ட்போன் அப்டேட்

எல்ஜி ஸ்மார்ட்போன் அப்டேட்

அதேபோல் தற்போது எல்ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சாதனங்களுக்கான அப்டேட் அடுத்த குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் எனவும் பிராந்தியத்தின் அடிப்படையில் அதுமாறுபடும் எனவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் துறையில் பல்வேறு புதுமைகள்

ஸ்மார்ட்போன்கள் துறையில் பல்வேறு புதுமைகள்

ஸ்மார்ட்போன்கள் துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வந்த நிறுவனம் எல்ஜி. தென்கொரிய நிறுவனமான எல்ஜி ஸ்மார்ட்போன்கள் துறையில் பல்வேறு புது அம்சங்களை, அட்டகாச லுக் உடனும் சாதனங்களை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன்கள் சந்தையில் இருந்து எல்ஜி வெளியேறுவது என்பது மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் துறையில் எல்ஜி அறிமுகம் செய்த சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம். எல்ஜி நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்த சிறந்த சாதனங்களை பார்க்கலாம்.

எல்ஜி ஃப்ளெக்ஸ்

எல்ஜி ஃப்ளெக்ஸ்

எல்ஜி ஃப்ளெக்ஸ் வளைந்த ஸ்மார்ட்போன் 2021-ல் ஆடம்பர மாடல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை என்றே கூறலாம். 2013 ஆம் ஆண்டில் எல்ஜி நிறுவனம் எல்ஜி ஃப்ளெக்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த சாதனத்தின் பெயர் குறிப்பிடுவது போல் டிஸ்ப்ளே மட்டுமின்றி மொத்த ஸ்மார்ட்போனையும் வளைக்கலாம். சிறந்த அம்சங்களோடு வெளியான இந்த ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான வடிவமைப்பை கொண்டிருக்கும்.

உயிரோடு புதைக்கப்பட்ட யூடியூபர்.. 52 மில்லியன் பேர் பார்த்த வீடியோ.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?உயிரோடு புதைக்கப்பட்ட யூடியூபர்.. 52 மில்லியன் பேர் பார்த்த வீடியோ.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?

நெக்ஸஸ் ஸ்மார்ட்போன்

நெக்ஸஸ் ஸ்மார்ட்போன்

எல்ஜி பல நெக்ஸஸ் ஸ்மார்ட்போன்களை உருவாக்கியுள்ளது. நெக்ஸஸ் 4 என்பது சிறய வடிவ சாதனமாகும். ப்ரீமியம் உருவாக்க தரம், கூகுள் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆகியவற்றுடன் வருகிறது. முதன்மை ரக ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புகளில் புதிய அமைப்பு சாதனம் இதுவாகும்.

எல்ஜி ஜி5 ஸ்மார்ட்போன்

எல்ஜி ஜி5 ஸ்மார்ட்போன்

எல்ஜி ஜி5 சாதனமானது சிறந்த ஸ்மார்ட்போன்களில் இருந்து தனித்து நிற்கும் ஒரு சாதனமாகும். எல்ஜி இந்த சாதனத்தை 2016-ல் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை எளிதில் மாற்ற அனுமதிக்கிறது. எல்ஜி ஜி5 சாதனம் சிறந்த வடிவமைப்புடன் வருகிறது.

எல்ஜி ஜி8 எக்ஸ் சாதனம்

எல்ஜி ஜி8 எக்ஸ் சாதனம்

எல்ஜி ஜி8 எக்ஸ் சாதனம் ஒரு நிலையான தோற்றத்தை வழங்குகிறது. இது ஒரு சிறப்பு அம்சத்தை கொண்டிருக்கிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் சகாப்தத்தில் ஒரு சிறந்த சாதனம் இதுவாகும். எல்ஜி-ன் குறைந்தவிலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த சாதனத்தின் டிஸ்ப்ளே மடிக்கக்கூடியவை ஆகும்.

எல்ஜி விங் 5 ஸ்மார்ட்போன்

எல்ஜி விங் 5 ஸ்மார்ட்போன்

எல்ஜி விங் 5., ஸ்மார்ட்போன் துறையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்திய சாதனம் இதுவாகும். பிற ஸ்மார்ட்போன்களை போல் இல்லாமல் இது இரட்டை சுழல் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கிறது. மேற்புற சுழல் டிஸ்ப்ளே, இரண்டாம் நிலையான டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் வித்தியாசமான மிகப்பெரிய அம்சமாக இது இருந்தது.

Best Mobiles in India

English summary
LG Mobile Phone Business Confirmed to Close: Best LG Smartphone List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X